இன்று பிரதோஷம்! இந்த 5 எழுத்து மந்திரம் உச்சரித்தால் சிவனருள்!! புதன்கிழமை பிரதோஷத்திற்கு இத்தனை சிறப்புகள்!

First Published | May 3, 2023, 10:09 AM IST

ஒருவர் 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருந்தால் சிவ கணங்களில் ஒருவராக மாறி, சிவனுக்கு தொண்டு செய்யும் அடியான் பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். 

தொடர்ச்சியாக ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பிரதோஷ விரதத்தை பின்பற்றினால் எல்லா வித துன்பங்களையும் நீக்கி, அனைத்து வகையான நன்மைகளையும் பெறுவார். பிரதோஷ விரதம் என்றால், சிவபெருமான், பார்வதி தேவியின் அருளை பெற அனுசரிக்கப்படும் விரதமாகும். சுக்லபட்சம், கிருஷ்ண பட்சம் முறையே மாதத்திற்கு 2 பிரதோஷங்கள் வரும். 

பிரதோஷங்கள் சிறப்பு 

திங்கள் அன்று வருவது சோமவார பிரதோஷம் எனவும், சனி என்று வருவது சனி மகா பிரதோஷம் எனவும் அழைக்கப்படுகிறது. புதன்கிழமையில் வரும் பிரதோஷம் ரொம்ப விசேஷமானது. இந்து சாஸ்திரத்தின் படி, புதன்கிழமை சிறப்பு வாய்ந்தது. அன்றைய நாளில் விரதமிருந்தால் வீட்டில் செல்வ செழிப்பு கிடைக்கும். 

Tap to resize

புதன்கிழமை பிரதோஷம் 16 வகை செல்வங்களை வாரி வழங்கக் கூடியது. கல்யாணம் ஆகாதவர்கள் புதன்கிழமை பிரதோஷத்தில் சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் விரதம் இருந்து, மனதார பிரார்த்தனை செய்தால் திருமணம் கைகூடும். அவர்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியம், குழந்தை வரம், குடும்ப நிம்மதி கிடைக்கவும் புதன்கிழமை பிரதோஷ விரதம் இருக்கலாம். 

மந்திரங்கள் 

சிவ ஸ்லோகம், சிவ புராணம் போன்றவை படிக்க வேண்டும். புதன் பிரதோஷம் மாலை வேளையில் சிவன் கோயிலுக்கு சென்று, நந்திக்கும் சிவனுக்கும் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளில் பங்குபெறுங்கள். அன்றைய தினம் சிவன் தரிசனம் செய்வது மிகவும் நல்லது. அருகம்புல் மாலை சாற்றி நந்தியை வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும். அன்றைய சிவ வழிபாடு நமக்கு புத்தியை தெளிவடைய வைக்கும். மனோதிடம் அதிகமாகும். 

இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர! இந்த திசையில் 1 சிலந்தி செடி வைங்க! Spider Plant வைத்தால் இவ்வளவு நன்மைகள்!

இன்று புதன்கிழமை (ஏப்.3) பிரதோஷம். இன்றைய தினம் விரதம் இருக்க முடியாதவர்கள் சிவபுராணம் படித்து சிவனை மனம் உருகி நினைக்க வேண்டும்.  ‘நமசிவாய’ என்ற 5 எழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் உச்சரித்து கொண்டே இருப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என சிவாச்சார்யர்கள் கூறுகின்றனர். 

என்ன செய்ய வேண்டும்? 

பிரதோஷம் அன்று பசியில் வாடுவோருக்கு தயிர் சோறு அன்னதானம் செய்யுங்கள்.  ஒருவர் அல்லது இருவர் என உங்களால் இயன்ற அளவு உணவு பொட்டலங்களை கொடுங்கள். பசுவுக்கு பழங்கள் கொடுக்கலாம். இவற்றை வழங்கும்போது நமசிவாய நமசிவாய நமசிவாய.. என 3 தடவை உச்சரித்து வழங்குங்கள். சிவனின் ஆசி கிடைக்கும். 

இதையும் படிங்க: வீட்டிற்கு பாம்பு வருவது நல்லதா? கெட்டதா?

Latest Videos

click me!