சுக்ர பகவான் வசதி, ஆடம்பரம், இல்லற சுகம் உள்ளிட்ட விஷயங்களைத் தருபவர். இவர் மிதுனத்திற்கு இன்று (2.மே) பகல் 1.49 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவர் மே 30ஆம் தேதி வரை மிதுனத்தில் சஞ்சரிக்க உள்ளதால், தன்னுடைய பார்வை, கிரக கூட்டணிகளின் அடிப்படையில் சில ராசியினருக்கு பொருளாதாரம், வருமானத்தில் முன்னேற்றம், செயலில் வெற்றி மேல் வெற்றியைத் தருவார். எனவே சுக்கிரன், மிதுன ராசியில் சஞ்சரிக்கும் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்க போகிறது என்பதை பார்க்கலாம்.