Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அண்மையில் தான் சூரிய கிரகணம் முடிந்தது. இப்போது முதல் சந்திரகிரணம் வரவுள்ளது. சிலருக்கு சந்திர கிரகணம் என்றால் என்னவென தெரியாது. ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் வருவதை தான் சந்திர கிரகணம் என்பார்கள். அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி என்ற மாதிரி ஒரே நேர்க்கோட்டில் மூன்று கோள்களும் வரும். இந்த மாதிரி வரும்போது பூமியினுடைய நிழல் சந்திரனின் மேலே விழுவதால் தற்காலிகமாக சந்திரன் மறையும் நிகழ்வை சந்திர கிரகணமாக கருதுகிறோம்.
சந்திர கிரகணம் 2023
இந்த ஆண்டு சந்திர கிரகணம் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் சந்திர கிரகத்தின் அன்று சித்ரா பௌர்ணமி நாளுன் சேர்ந்தே வருகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் இதுதான். வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி தான் கிரகணம் நிகழ்கிறது.
இந்தியாவில் சந்திர கிரகணம் பார்க்க முடியுமா?
உலகிலுள்ள 5 கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஆகியவை அடங்கும். பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் தெளிவாக காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகண நேரம்
இந்திய நேரப்படி, இந்தாண்டின் முதல் பகுதி சந்திர கிரகணம் இரவில் 8.44.11 மணியளவில் தொடங்கும். இதன் உச்சக்கட்ட கிரகணம் இரவு 10.52.59 மணியில் தான் வருகிறது. இந்த கிரகணமானது வரும் மே 6ஆம் தேதி அன்று அதிகாலையில் 01.01.45 மணியளவில் தான் முடிவடைகிறது.