புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் ஓவர் கோட் அணிய வேண்டும் என அந்த மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும்.
இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து மாணவர்கள் ஒவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
23
மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணியும் நடைமுறை
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மாணவிகள் ஓவர்கோட் அணிய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான துணியும் அரசே வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு சீருடை மேல் ஓவர்கேட் அணியும் நடைமுறை உள்ளது.
2013ம் ஆண்டு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இந்த உடை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மாணவர் அமைப்புகள் மற்றும் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெவித்ததால் இந்த முடிவு பின்வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
33
மாணவிகளுக்கு பாதுகாப்பான உடை
சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் முறை என்பது மாணவிகளுக்கு பாதுகாப்பான உடையாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இந்த உடை பரிந்துரைக்கப்படுகிறது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி பெரும்பாலான தனியார் பள்ளிகளும் மாணவிகள் சீருடை மேல் ஓவர்கேட் அணியும் நடைமுறையை ஏற்கெனவே கொண்டு வந்து விட்டன.
கல்வித்துறை முடிவுக்கு வரவேற்பு
இப்போது புதுச்சேரி கல்வித்துறை மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுடிதார் மேல் ஓவர்கோட் அணிவது மாணவிகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.