நீண்ட இடைவேளிக்கு பிறகு புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 101 தேர்வு மையங்களில் வருகிற 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.