School Holiday: தீபாவளிக்கு 4 இல்ல 5 நாட்கள் விடுமுறை! அரசின் அறிவிப்பால் குஷியில் பள்ளி மாணவர்கள்!

First Published | Oct 19, 2024, 6:14 PM IST

Diwali School Holiday: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Diwali festivel

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. 

Government Employee

 இடையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: Diwali Holiday: நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! ஆனால் ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

Latest Videos


School Holiday

தொடர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு எப்போதும் வரும் என பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள்,  பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

Puducherry Government

இந்நிலையில், புதுச்சேரியில் 4 நாட்கள் இல்லாமல் 5 நாட்கள் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரியில் வழக்கம்போல் தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ம் தேதி புதன்கிழமை விடுமுறையாகும். 

இதையும் படிங்க:  TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!

School Five Days Holiday

நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை நாள், நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தீபாவளிக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!