தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாக உள்ள ஆளுநர் பதவிகளில் ஒன்று எச்.ராஜாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் எப்படியாவது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ள பாஜக கடந்த 10 வருடங்களில் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாஜவை தமிழகத்தில் வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்ட தலைவர்களை அங்கீகரித்த பாஜக, மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கி அழகு பார்த்தது.
25
ஆளுநர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் பாஜக
அடுத்ததாக மூத்த நிர்வாகியாக இருந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பு தேடி வந்தது. அடுத்ததாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆளுநர்பொறுப்பும் வழங்கப்பட்டது. தற்போது குடியரசு துணை தலைவர் பதவியும் வழங்கப்படவுள்ளது.
இது மட்டுமில்லாமல் மற்றொரு மூத்த தலைவரான இல.கணேசனுக்கும் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருக்கு நாகலாந்து மாநில ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கி மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்
35
இல.கணேசன் மறைவு- காலியான ஆளுநர் பதவியிடங்கள்
இந்த நிலையில் இல.கணேசன் உடல்நிலை பாதிப்பு காரணமாக காலமாகியுள்ள நிலையில் நாகலாந்து மாநில ஆளுநர் பொறுப்பு காலியாகியுள்ளது. அடுத்ததாக துணை குடியரசு தலைவர் பதவிக்கு மஹாராஷ்டிரா ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ள நிலையில், அந்த இடமும் காலியாக உள்ளது.
எனவே தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருந்த நிலையில் தற்போது யாருமே ஆளுநராக இல்லை. எனவே தமிழகத்தில் இருந்து பாஜகவில் பணியாற்றும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகாலமாக காத்திருக்கும் எச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து மூத்த பாஜக தலைவராக உள்ள எச். ராஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.
எச்.ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதி ஆவார். அவரது அரசியல் பயணம் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது. எச். ராஜா 7 வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 1988-1990 வரை சிவகங்கை மாவட்டத்தில் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக இருந்தார்.
55
யார் இந்த எச் ராஜா.?
1978 இல் காரைக்குடி 4வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்
1998, 1999, 2014, 2019 என சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பலமுறை போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை. 2021 ஆம் ஆண்டு மீண்டும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் தான் தமிழக பாஜகவில் மூத்த தலைவராக உள்ள எச் ராஜாவிற்கு ஆளுநர் பதவியானது தேடி வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.