மோடியை எதிர்த்து சீமான் போட்டி
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?
திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.