கனகராஜ் ஜெயலலிதா கார் டிரைவர் கிடையாது.. கொடநாடு கேள்வியால் கடுப்பான இபிஎஸ்.!

First Published | Aug 25, 2023, 12:39 PM IST

இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவுக்கு மதுரை அதிமுக மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றாக உள்ளது என்பது மதுரை மாநாடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க கோரி ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அதிமுகவினர் இனி வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கையில்;- அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இது நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும். 

Tap to resize

இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவுக்கு மதுரை அதிமுக மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றாக உள்ளது என்பது மதுரை மாநாடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
ஆகையால், அதிமுகவினர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். இனியாவது பிளவு ஏற்பட்டு விட்டது என்று கூறுவதை நிறுத்திவிடுங்கள். கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம். 

நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் தான் தனபால். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். யார் வேண்டும் என்றாலும் ரோட்டில் பேசுவார்கள். பேசுவது சரியா தவறா என்று பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். கனகராஜ் ஜெயலலிதா டிரைவர் கிடையாது. சசிகலாவுக்கு தான் அவர் ஓட்டுநராக இருந்தார் என இபிஎஸ் கூறியுள்ளார். 

Latest Videos

click me!