என்னுடைய உடல் நிலை குறித்து வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம்..! தொண்டர்களை நாளை சந்திப்பேன்- விஜயகாந்த் அதிரடி

Published : Aug 24, 2023, 10:44 AM IST

தமிழக மக்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஜயகாந்த், அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV
15
என்னுடைய உடல் நிலை குறித்து வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம்..! தொண்டர்களை நாளை சந்திப்பேன்- விஜயகாந்த் அதிரடி

பிறந்தநாள் கொண்டாட்டம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை "வறுமை ஒழிப்பு தினமாக" கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை "இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள். 

25
பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்:

வறுமை ஒழிப்பு தினம்

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும்,

35
பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்:

மாணவ, மாணவிகளுக்கு உதவி திட்டம்

பெண் சிசுக் கொலையை தடுத்திட "பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், 

மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கிவருகிறோம். இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பலரும் பல்வேறு உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.

45
Vijayakanth and premalatha

நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் வழங்கப்படும். இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்யவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். 

55
vijayakanth

உடல் நிலை எப்படி உள்ளது

அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.  மேலும்  என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.08.2023 காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories