பிரிவினையை தூண்டும் திமுக
என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதல் கட்டம் நேற்று நெல்லையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து வருகிறது அதனை இந்த யாத்திரை மாற்றி அமைக்கும். தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையும் பிரிக்கும் வகையில் தவறான தகவல்களை தந்து திமுக அரசு மக்களிடம் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.திமுகவும் காங்கிரசும் குடும்பத்திற்காக நடத்தும் கட்சி மக்களை பற்றி எந்த கவலையும் பட்டது கிடையாது.