ஐபிஎஸ் டூ அரசியல்
பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாவார், பிரதமர் மோடி மீதான ஈர்ப்பு காரணமாக தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் நுழைந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் இணைந்து செயல்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை. இதன் காரணமாக அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோவிடம் 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியடைந்தார்.
அரவங்குறிச்சி தேர்தலில் போட்டி
இதனையடுத்து பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்து வருகிறார். மேலும் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். இந்தநிலையில் அண்ணாமலையின் சொத்து பட்டியல் தற்போது சமூகவலை தளத்தில் பரவி வருகிறது. அரவங்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையத்தில் அண்ணாமலை வேட்பு மணு தாக்கல் தாக்கல் செய்தார் அப்போது தனது சொத்து விவரங்களையும் இணைத்திருந்தார். அதில் தனது கையில் ரொக்கமாக 1 லட்சம் ரூபாயும், தன் மனைவி அகிலாவிடம் ஒன்றரை லட்சம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் எச்டிஎஃப்சி வங்கியில் 12,59,849 ரூபாய் இருப்பும், கரூர் கனரா வங்கியில் 25,02,000 ரூபாய் வைத்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.
வாகனம், நகை மதிப்பு என்ன.?
மேலும் அவரது மகன் அர்ஜுன் தனது தாயுடன் சேர்ந்து வைத்திருக்கும் ஜாய்ண்ட் அக்கவுண்டில் 47,157 ரூபாய் 20 பைசாவும், அண்ணாமலையின் மனைவி பெங்களூர் எச்டிஎஃப்சி வங்கி கணக்கில் 13,33,670 ரூபாய் 80 பைசாவும் வைத்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவற்றில் 3,07,520 ரூபாய் 55 பைசா இவர் பெயரிலும் மனைவி பெயரிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 64 லட்ச ரூபாய் மனைவி அகிலா கடனாக கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் என்ற பார்க்கும் பொழுது 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி காரை 2017ல் வாங்கியதாக, தங்க நகைகள் தனது மனைவியிடம் 300 கிராம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு என்ன.?
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நகையின் மதிப்பு சுமார் 12,95,000 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் புலியங்குளம் கிராமத்தில் தனது மனைவிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சின்னதாராபுரம் கிராமத்தில் தனக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் விவசாய நிலங்கள் இருக்கின்றதென குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் சேர்த்து அசையும் சொத்துக்களென தன்னிடம் 46,13,849 ரூபாயும் தன் மனைவியிடம் 94,73,348 ரூபாய் 55 பைசா இருப்பதாக ஆக மொத்தம் 1,40,87,197 ரூபாய் 55 காசுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அசையும் அசையா சொத்துக்கள் மதிப்பு 2 கோடியே 90 லட்சத்து 87 ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு ரூபாய் ஐம்பத்தைந்து காசுகள் என அண்ணாமலை வேட்புமனு தாக்கலின் போது தெரிவித்துள்ளார்.