நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகர்மன்றத் தலைவராக விஜய் கண்ணன் இருந்து வருகிறார். இவர் குமாரபாளையம் நகரச் செயலாளர் பதவி அல்லது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இந்த இரண்டு பதவியும் வழங்காமல் சுற்றுச்சூழல் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.