கொடநாடு கொள்ளை இபிஎஸ் சொல்லியே நடந்தது! என்னுடை தம்பி விபத்தில் இறக்கவில்லை! திட்டமிட்ட சதி! கனராஜ் அண்ணன்

Published : Aug 24, 2023, 01:58 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கூறியுள்ளார். 

PREV
15
கொடநாடு கொள்ளை இபிஎஸ் சொல்லியே நடந்தது! என்னுடை தம்பி விபத்தில் இறக்கவில்லை! திட்டமிட்ட சதி! கனராஜ் அண்ணன்

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.  இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்கிடையே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி மர்மமான முறையில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

25

மேலும் 2017ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அங்கு பணியாற்றிய சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொடைநாடு வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

35
kodanad

இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- எனது தம்பி கனகராஜ் கொடநாடு நாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய நேரத்தில் பெருந்துறையில் வைத்து சந்தித்தேன். அப்போது கொடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார். அதில், ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. 

45

எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். 3 பைகளை சங்ககிரியிலும், 2 பைகளை  சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுப்பதாக தெரிவித்தார். 

55

மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய நிலையில் தான் ஆத்தூரில் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. இபிஎஸ்ஐ விசாரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இபிஎஸ்க்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இதுகுறித்து தெரியவரும் என  கனகராஜின் அண்ணன் தனபால் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories