25 லட்சத்தை தனி நபருக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு.! இந்த ஆவணம் இருந்தால் மட்டும் போதும்- அசத்தல் அறிவிப்பு

Published : Sep 17, 2025, 12:53 PM IST

 தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் பெற தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து இந்த உள்ளடக்கம் விவரிக்கிறது.

PREV
14
தமிழக அரசின் கடன் உதவி திட்டங்கள

தமிழக அரசு சார்பில் பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் முன்னேற்றத்திற்காகவும், சொந்தமாக தொழில் செய்யவும் மானிய கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொழில் தொடங்க 25 லட்சம் வரைக்கும் கடனுதவியாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த கடன் உதவி திட்டத்தை பெற எப்படி விண்ணப்பிப்பது. எந்த எந்த ஆணவங்கள் தேவை என்பதை தற்போது பார்க்கலாம்.

24
விண்ணப்பிக்கும் முறை

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.

டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்

மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள்/கட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

34
தனி நபர் கடன் திட்டம் ரூ. 25 லட்சம்

சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவி

திரும்ப செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள்

ஆண்டு வட்டி விகிதம் 7-8 சதவீதம்

பயனாளியின் பங்கு 5 சதவீதம்

தகுதிகள்

பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.

வயது: 18-60 வரை.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

44
தேவைப்படும் ஆவணங்கள்

சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்

திட்ட அறிக்கை

முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி (ரூ. 5 இலட்சத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டும்).

குடும்ப அட்டை ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories