தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஓபிஎஸ் டீமில் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திருவள்ளூர் மாரப்பன், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் சிதம்பரம், கவுந்தம்பாடி முத்துசாமி உள்ளிட்ட பலருமே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்கள். செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்த அந்த எதிர் முகாம் கூட எடப்பாடி பழனிசாமி பக்கம் போய் சேர்ந்து விட்டார்கள். இது மட்டுமல்ல. இப்போது டெல்லிக்கு சென்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
செப்டம்பர் 15ஆம் தேதி பேரறி ஞர் அண்ணா பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திட்டு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், ‘‘ அதிமுகவில் பிரிந்த தலைவர்களை சேர்க்கவில்லை என்றால் பிறகு தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து அதிமுகவை காப்பாற்றுவார்கள். அவர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பார்கள்’’ எனக் கூறினார். அடுத்து செங்கோட்டையன் தொடர்ந்து என்னுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கிறார். செங்கோட்டையனுடன் சசிகலா, தினகரன் எல்லோரும் சந்திக்கக்கூடிய நாள் விரைவில் வரும் என எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்வதாக சொன்னது செங்கோட்டையனுக்கு எதிரான நெகட்டிவ் மதிப்பீடை அதிகமாக்கி விட்டது. இதையெல்லாம் வைத்து எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்னவென்றால் செங்கோட்டையன் இப்படி கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.