மோடியை வெறுப்பேற்ற ராகுலை புகழ்ந்து தள்ளும் பாகிஸ்தான்..! அஃப்ரிடியின் ஈனத்தன விளையாட்டு..!

Published : Sep 16, 2025, 04:05 PM IST

ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியடைந்ததால் அவர் மிகவும் கோபமடைந்துள்ளார். ஷாஹித் அப்ரிடி ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசும் அதேவேளையில், மோடி அரசை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.

PREV
14
மோடிக்கு எதிராக குற்றம்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் மைதானத்தைத் தவிர மற்ற இடங்களில் அடித்து ஆடுகிறார்கள். இம்ரான் கானைப் போன்றே அவர்களில் பலரும் பாகிஸ்தானின் தலைவராக வேண்டும் என்ற லட்சிய வெறியை கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி. அவர் வாய் திறக்கும்போதெல்லாம், இந்தியாவுக்கு எதிராக, பிரதமர் மோடிக்கு எதிராக குற்றம்சாட்டி வருகிறார். 

ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியடைந்ததால் அவர் மிகவும் கோபமடைந்துள்ளார். ஷாஹித் அப்ரிடி ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசும் அதேவேளையில், மோடி அரசை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.

24
ஒரு இஸ்ரேல் போதாதா?

ராகுல் காந்தியைப் புகழ்ந்துள்ள அவர், ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டவர். நீங்கள் ராகுல் காந்தியைப் பார்த்தால், அவர் மிகவும் நேர்மறையான அணுகுமுறை கொண்டவர். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் இந்த மோடி அரசு... நீங்கள் இன்னொன்றை உருவாக்க முயற்சிக்க ஒரு இஸ்ரேல் போதாதா?’’ என பாகிஸ்தானின் சாமா டிவியில் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

மோடி அரசை அஃப்ரிடி வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். 370வது பிரிவை ரத்து செய்த மோடி அரசின் கொள்கைகளை வெகுவாக விமர்சித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசிய கோப்பை குழு நிலை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

34
பாகிஸ்தானின் போஸ்டர் பாய்

மறுபுறம், ராகுல் காந்தி பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச நட்பாக இருப்பதாகவும், அவரை ‘பாகிஸ்தானின் போஸ்டர் பாய்’ என்று பாஜக அடிக்கடி குற்றம் சாட்டி வருவதாகவும் கூறியுள்ளார் அஃப்ரிடி. கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் புகழ்ந்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.

44
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம்

குஜராத்தில் நடந்த ஒரு பேரணியில் ​​பிரதமர் மோடி, ‘‘இன்று இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்து வருவது தற்செயலாக நடக்கிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பாகிஸ்தான் இளவரசர் ராகுல் காந்தியை பிரதமராக்க ஆர்வமாக உள்ளது. காங்கிரஸ் பாகிஸ்தானின் ரசிகர் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான இந்த கூட்டணி இப்போது முழுமையாக அம்பலமாகிவிட்டது’’ எனத் தெரிவித்து இருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories