செங்கோட்டையனை நான் பார்த்துக்குறேன்... இவங்கள கவனிங்க சார் முதல்ல... அமித் ஷாவிடம் ஃபைலை நீட்டிய இபிஎஸ்..!

Published : Sep 17, 2025, 11:44 AM IST

அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு உள்ளது. கட்சி தலைவராக நைனார் நாகேந்திரன் இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் அண்ணாமலையின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஃபைலை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளார் இபிஎஸ்

PREV
14
நிலைமையை மாற்றிய இபிஎஸ்

'நான் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாக, பத்திரிகைகளில் எழுதுகின்றனர்' என நேற்று முன்தினம் இரவு ஆவேசமாக பேசிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டு, நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

அமித் ஷாவை சந்தித்து பேசியபோது பையில் கொண்டு சென்ற ஃபைலை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் விவகாரம்தான் முக்கியமாக பேசப்படும் என கருத்து நிலவிய நிலையில் அந்த ஃபைலில் வேறொருவர் பற்றிய தகவல்களை அடுக்கி வைத்து கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

24
அமித் ஷாவிடம் ஃபைலை நீட்டிய இபிஎஸ்

தமிழக பாஜகவில் சிலர் அதிமுகவிற்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இது தொடர்பாக டெல்லி பயணத்தில் அமிடத ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பைல் ஒன்றை அழித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியில் இருந்தபோதும், அண்ணாமலைதான் இன்னும் கட்சியில் கணிசமான செல்வாக்குடன் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது பாஜகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக அதிமுக கூட்டணியை விரும்பாத அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவிற்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால் தமிழக பாஜகவில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார். அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு உள்ளது. கட்சி தலைவராக நைனார் நாகேந்திரன் இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் அண்ணாமலையின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

34
அண்ணாமலைக்கே முக்கியத்துவம்

எடப்பாடி பழனிச்சாமி தோல்வியடைய வேண்டும் என்று பாஜகவில் ஒரு குழு செயல்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தடுக்க முடியாது.இது பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என நினைக்கிறார்கள். திமுகவை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றும் அவர்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்று குறைபாடு நிலவுகிறது. சமீபத்தில் ஆ.ராஜா, அமித் ஷாவை கடுமையாக விமர்சனம் செய்ததை நயினார் நாகேந்திரன் கண்டு கொள்ளவில்லை.

44
இபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தல்

டில்லி அடுத்த கடிந்து கொண்ட பிறகே நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். நயினார் நாகேந்திரனின் இந்த அணுகுமுறையை அண்ணாமலை அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி தரப்பும் நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல். நயினார் தலைவராக இருந்தாலும் செயல்பாடுகளில் செல்வாக்காக இருப்பவர் அண்ணாமலை மட்டுமே இருந்து வருகிறார். பாஜகவின் இந்த செயல்பாடுகள் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பாதிக்கும். தமிழக பாஜகவில் உள்ள சிலர் அதிமுகவிற்கு எதிராக காய் நகர்த்துவதாக எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இது தொடர்பாக டெல்லி பயணத்தில் அமித் ஷாவிடம், முக்கிய தகவல் அடங்கிய அந்த ஃபைலை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ளார். இதன் மூலம் எங்கள் கட்சி விவகாரங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கட்சி விவராகங்களை முதலில் பாருங்கள் என அமித் ஷாவுக்கு சிம்பாலிக்காக உணர்த்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories