தமிழகத்தை கைப்பற்ற செம பிளான்.! நெல்லையில் கால் வைக்கும் அமித்ஷா- தேதி குறித்த பாஜக

Published : Aug 18, 2025, 10:37 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது. நெல்லையில் மண்டல மாநாடு நடத்தி, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

PREV
14
தேர்தலுக்கு களம் இறங்கும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை கைப்பற்ற திட்டங்களை தீட்டி வருகிறது. கிளைக்கழகம் முதல் மாவட்டங்கள் வரை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

200 தொகுதியில் வெற்றி என்ற இலக்கோடு கூட்டணி கட்சியையும் விட்டு விடாமல் திமுக பாதுகாத்து தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது. இதே போல தேர்தல் களத்தில் புதிதாக குதித்துள்ள நடிகர் விஜய், வருகிற 21ஆம் தேதி மதுரையில் மாநில மாநாட்டை முடித்து விட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

24
திமுகவை வீழ்த்த திட்டம் போடும் அதிமுக- பாஜக

அடுத்தாக எதிர்கட்சியான அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது. இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லையென அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய பலத்த அடி காரணமாகவும் திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கவும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கவுள்ளது. எனவே இந்த முறை தமிழகத்தை கைப்பற்ற பாஜக தேசிய மேலிடம் பிளான் போட்டு வருகிறது.

 ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொடர் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில் கொடி கட்டி பறக்கும் நிலையில், தென் மாநிலங்களில் இந்த முறை குறிப்பாக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தமிழத்தில் காலூன்ற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

34
நெல்லையில் கால் வைக்கும் அமித்ஷா

இந்த நிலையில் பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாட்டை அறிவித்துள்ளது. நெல்லையை தலைமையிடமாக கொண்டு முதல் மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார். 

வருகிற 22-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமித்ஷா தூத்துக்குடி வந்தடைகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளோடு தனியாக ஆலோசனை நடத்தும் அவர், தமிழக தேர்தல் நிலவரம் கூட்டணி ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்கவுள்ளார். இதனையடுத்து மாலை 6 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

44
திமுகவிற்கு எதிராக அமித்ஷாவின் பிளான்

அப்போது பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்தில் உள்ளடக்கிய நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நெல்லை மண்டலத்தில் மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1 லட்சம் பேர் இந்த மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories