புதிய துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தமிழரான சிபிஆருக்கு ஆதரவளிப்பதா என்ற தர்மசங்கடமான நிலை திமுகவுக்கு உருவாகியுள்ளது.
துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க ஆளுங்கட்சியான பாஜக தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில் தங்கள் அணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க பல கட்ட ஆலோசனைகள் நடத்திய நிலையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் தனது 14-16 வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்துடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1974 இல் ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
24
யார் இந்த சிபிஆர்
1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 2004 இல் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார். 2014 இல் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 3,89,000 வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இருப்பினும், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தோல்வியடைந்தார்.
சிபி ராதாகிஷ்ணன் பணியை பாராட்டிடும் வகையில் 2023 ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பு தேடி வந்தது. அடுத்ததாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக செயல்பட்டு வந்தவர் தற்போது 2024 ஜூலை 27 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.
34
ஆளுநர் டூ துணை குடியரசு தலைவர்
இந்த நிலையில் தான் துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்யும் பணியை பாஜக அரசு மேற்கொண்டது. அதில் தங்கள் அணி சார்பில் யாரை நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்தவரை துணை குடியரசு தலைவராக நிறுத்தி திமுகவிற்கு செக் வைத்துள்ளது பாஜக,
எனவே குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுந்துள்ளது. தற்போது திமுகவுக்கு தர்ம சங்கடமான நிலை உருவாகியுள்ளது. துணை ஜனாதிபதிக்கு தேர்தல் நடந்தால் காங் நிறுத்தும் தமிழரல்லாத வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வாக்களிக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்லது தமிழரான சிபி ஆருக்கு வாக்களிக்குமா.? என அரசியல் விமர்சர்கள் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். சிபிஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் காங்கிரசுக்கு எதிரான இண்டி கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்ததாக கருதப்படும். சிபிஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் பாஜகவும் - திமுகவும் கூட்டணி என எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கிவிடும்.
மேலும் துணை ஜனாதிபதியாக தமிழர் வருவதை விரும்பாத திமுக என பெயரும் திமுகவிற்கு கிடைக்கும். இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சரும்- திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய தண்பராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முதலமைச்சர் ஸ்டாலினை சிபி ராதாகிருஷண்ன நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். எனவே அப்போதே தான் துணை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளாராக களத்தில் இறங்க இருப்பதாகவும் அதற்கு ஆதரவு தரும்படி கேட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. எனவே திமுகவின் முடிவு என்ன என கேள்வியானது எழுந்துள்ளது.