1998, 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார். 1998ல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999-ல் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.
2004 முதல் 2007 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார். அப்போது 93 நாட்கள், 19,000 கி.மீ. தூரம் சுற்றுப்பயணம் செய்தார். இந்திய நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி ‘ரத யாத்திரை’ மேற்கொண்டார்.
2016-2020ல் இந்திய கயிறு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி, கயிறு ஏற்றுமதியை 2,532 கோடி ரூபாயாக உயர்த்தினார்.
2020-2022ல் கேரளாவிற்கு பாஜகவின் அகில இந்திய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2004ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 58-வது அமர்வில் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியாகப் பங்கேற்று, மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை மேம்படுத்துவது குறித்து உரையாற்றினார். 2014ல் இந்திய அரசின் முதல் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக தைவானுக்கு பயணம் செய்தவர்.