தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு 13 நாட்களாக கடும் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இது திமுக அரசின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், ‘‘தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது’’ எனப் பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.அங்கு பேசிய திருமாவளவன், "தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.