திமுகவில் 4 சீட்..! டீல் முடித்த ஓ.பி.எஸ்..! பண்ரூட்டியார்- வைத்திலிங்கம் எடுத்த பகீர் முடிவு..!

Published : Aug 16, 2025, 01:37 PM IST

மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சராக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரை தொடர்ந்து எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதற்கு ஓபிஎஸுக்கு ஒரு துளியும் விருப்பமில்லை

PREV
14

திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ் தரப்புக்கு 4 சீட்டுக்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுறித்து அரசியல் விமர்சகர் ஆவின் வைத்தியநாதன் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலினை ஓரிரு முறை சந்தித்துப் பேசினார். இப்போது திமுகவுடன் டீல் முடிந்துவிட்டது. நான்கு தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு விட்டது. ஒரு ராஜ்யசபா கேட்டிருக்கிறார்கள். தொகுதி எல்லாம் பேசி முடித்து விட்டார்கள். எக்காலத்திலும் எடப்பாடி, பிஜேபி, தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விடக்கூடாது என்று ஸ்டாலின், ஓ.பி.எஸுக்கு நிபந்தனை விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் அணி தவெக பக்கம் போய் விடக்கூடாது என ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். அப்படிப்போனால் தவெக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலம் பொருந்திய இயக்கமாக மாறிவிடும் என நினைத்த ஸ்டாலின், ராஜதந்திரத்தால் ஓ.பிஎஸை இழுத்துவிட்டார். ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு 4 சீட், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் கேட்டிருக்கிறார்கள்.

24

பண்ரூட்டியார், ஓபிஎஸ் எடுத்த திமுக முடிவுக்கு செல்ல மாட்டார். வைத்தியலிங்கமும் செல்ல மாட்டார். இவர்களை தவிர ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் ஓபிஎஸை ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. டீல் முடிந்து திமுகவுடன் கை நனைத்துவிட்டார் ஓ.பி.எஸ். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் தவெகவுடன் இணைய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஓ.பி.எஸ், திமுக கூட்டணியில் இணைந்து விட்டார்.

ஆகையால் வரும் 27 ஆம் தேதிக்குள் பண்ரூட்டி ராமச்சந்திரன், தவெகவுக்கு ஆலோசகராக செல்வார். தவெக நடத்தும் மதுரை மாநாட்டிற்கு பண்ருட்டியார் செல்லும் வாய்ப்பு அதிகம். ஓ.பி.எஸ் அணியில் அவரைவிட, அதிக செல்வாக்கு உள்ள நபர் வைத்தியலிங்கம். அவரும் சுத்தமாக அதிமுகவை கைகழுவி விட்டார். எடப்பாடி திருந்தவில்லை. வேறு வழியில்லாமல் அவரும் தவெகவுக்கு செல்ல இருக்கிறார். ஆகையால் மதுரையில் நடக்கும் தவெக மாநாட்டில் இவரும் முக்கிய இடத்தில் இருப்பார்.

34

திமுகவுடன் இணையும் ஓ.பி.எஸ் எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வது அவரது ஆதரவாளர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அவரது நிலைமையும் யோசித்துப் பார்க்க வேண்டும். எடப்பாடி, ஓபிஎஸை ரோட்டில் இன்று பிச்சை எடுக்கும் அளவிற்கு ஆளாக்கிவிட்டார். கரை வேட்டி கட்டவிடவில்லை. பிஜேபியை நம்பி, குருமூர்த்தியை நம்பி, அமித்ஷாவை நம்பி, மோடியை நம்பி நடு ரோட்டிற்கு வந்து விட்டார். இதற்கு மேல் அவர் அதிமுக சேர்த்துக்கொள்ளுமோ, பாஜக பார்த்துக் கொள்ளுமோ என நம்பி இருந்தார் என்றால் ஓ.பி.எஸை நம்பியுள்ள அவரது தொண்டர்களுக்கு அவர் செய்யும் துரோகமாகத்தான் இருக்கும்.

அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் திமுக கூட்டணிக்கு சென்று விட்டார். இவர்களையெல்லாம் பழிவாங்க வேண்டும் என்றால் ஒரே வாய்ப்பு திமுகதான். அதற்காகத்தான் அவர் திமுகவுக்கு சென்று விட்டார். எடப்பாடி மீண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது, முதலமைச்சராகி விடக்கூடாது என்கிற ஒற்றை குறிக்கோளுடன் திமுக கூட்டணிக்கு சென்று விட்டார். ஓபிஎஸ் வேறு எதையும் பெரிதாக எதிர்பார்த்து அங்கே செல்லவில்லை. நான்கு சீட்டுக்காகவும் போகவில்லை.

44

திமுக -அதிமுக எதிர்ப்பெல்லாம் ஜெயலலிதா- கருணாநிதி காலத்திலேயே போய்விட்டது. இப்போது பகைமை எல்லாம் மறந்து விட்டார்கள். இப்போது பிரச்சினை என்னவென்றால் தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சராக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரை தொடர்ந்து எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதற்கு ஓபிஎஸுக்கு ஒரு துளியும் விருப்பமில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories