பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் தான் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் பழங்களை சாப்பிட்ட பிறகு பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு ஒன்று உள்ளது. அது என்னவென்றால், பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது. இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
25
செரிமான பிரச்சனைகள் :
பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானம் மெதுவாகும். அஜீரணம், அமிலத்தன்மை, வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பழங்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுவது தடுக்கப்படும். இதன் விளைவாக உடலுக்கு முழு நன்மைகளும் கிடைக்காமல் போகும். குறிப்பாக ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு பழங்களில் இந்த பிரச்சனை ரொம்பவே அதிகமாக ஏற்படும்.
35
உடலில் pH அளவில் மாற்றம்
பழங்களை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் உடலில் pHஅளவு குறைந்து விடும். மேலும் சில பழங்களில் ஏற்கனவே நீர்ச்சத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் நீர்ச்சத்தை மேலும் அதிகரிக்கும். சில சமயம் வாந்தி கூட வரும்.
பழங்கள் சாப்பிட்டு உடனேயே தண்ணீர் குடித்தால் செரிமானம் மெதுவாகி, உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்து. எனவே சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட்ட உடனே ஒருபோதும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
55
சளி மற்றும் இருமல்
பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் உடலில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பழங்களை சாப்பிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.