
காலிஃப்ளவர் அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றாகும். குளிர்காலத்தில் மார்க்கெட்டுகளில் இதை அதிகமாக காண முடியும். காலிஃப்ளவர் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. எவ்வளவு சத்துக்கள் காலிஃப்ளவரில் இருந்தாலும், ஒரு சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் காலிபிளவர் சாப்பிடக்கூடாது. இல்லையெனில், பிரச்சனை மேலும் அதிகரிக்கும். எனவே எந்தெந்த நபர்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாயு, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டு இருந்தால் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் ஆகாது மற்றும் செரிமான பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது மலச்சிக்கல் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் நீங்கள் காலிஃப்ளவர் சாப்பிட வேண்டாம். ஏனெனில் நீங்கள் காலிஃபிளவர் சாப்பிடும் போது அது உங்கள்ன்தைராய்டு சுரப்பியில் டி3, டி4 ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால் தான் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி காலிஃப்ளவர் சாப்பிட்டால் தைராய்டு சுரப்பினால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு வேறு சில மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.
சிறுநீரக கல் பாதித்தவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் காலிஃப்ளவரில் அதிக அளவு கல்சியம் உள்ளதால் அது கல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். அதுபோல காலிஃபிளவரின் அதிகப்படியான நுகர்வு உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிப்பதால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களும் காலிஃப்ளவர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
காலிஃப்ளவர் இரத்தத்தை அதிகமாக உறையச் செய்யும். எனவே நீங்கள் ஏற்கனவே இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தால் காலிஃப்ளவர் சாப்பிட வேண்டாம். மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் காலிஃபிளவரை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
பாலூட்டும் தாய்மார்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காலிஃபிளவர் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்று வலி, வாயு தொல்லையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.