Peanuts in Winter : குளிர்காலத்தில் வேர்க்கடலை கண்டிப்பா சாப்பிடனும்!! இந்த நன்மைகளை தவறவிடாதீங்க

Published : Nov 20, 2025, 06:30 PM IST

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
Peanuts Benefits in Winter

குளிர்காலத்தில் உடல் அதிக வெப்பத்தையும் ஆற்றலையும் விரும்பும். அப்போது வேர்க்கடலை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் போன்றவை உள்ளன.

25
குளிர்காலத்தில் வேர்க்கடலை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்..?

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்தும். எலும்பு பிரச்சனைகளைத் தவிர்க்க இதை தினசரி உணவில் சேர்க்கலாம். உடல் எடையைக் குறைக்கவும் தினமும் ஒரு கைப்பிடி சாப்பிடலாம்.

35
உடலை உற்சாகப்படுத்துகிறது

குளிர்காலத்தில் ஆற்றல் குறைவாக உணர்ந்தால், வேர்க்கடலை சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

45
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை

நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை சமன் செய்யும். பளபளப்பான சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.

55
வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்..?
  • தினமும் ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையை மதியம் அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம். ஆனால் வாயு பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடக் கூடாது. வேண்டுமானால் வேக வைத்து சாப்பிடலாம். வேகவைத்த வேர்க்கடலை குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • அதுபோல வேர்க்கடலையுடன் வெள்ளரி, கேரட், வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. எனவே இது எடை இழப்பிற்கு பெரிதும் பங்களிக்கும்.
  • வேர்க்கடலை ஆரோக்கியமானது என்றாலும் அவற்றை 30 முதல் 50 கிராமுக்கு மேல் சாப்பிட வேண்டாம். குறிப்பாக அதிக எடை உள்ளவர்கள் 30 கிராமுக்கு மேல் ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
Read more Photos on
click me!

Recommended Stories