Fried Rice : அடிக்கடி ஃப்ரைட் ரைஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இதையும் தெரிஞ்சுட்டு சாப்பிடுங்க

Published : Nov 20, 2025, 03:30 PM IST

ஃப்ரைட் ரைஸ் அதிகமாக வாங்கி சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும் என்பதை குறித்து இந்த பதிவு பார்க்கலாம்.

PREV
15

இப்போதெல்லாம் ஃப்ரைட் ரைஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. ரோட்டில் கூட ஆங்காங்கே ஃப்ரைட் ரைஸ் கடையை நம்மால் பார்க்க முடிகிறது. நம்மில் பெரும்பாலானோர் ரோடுகளில் விற்கும் ஃப்ரைட் ரைஸ் வாரத்திற்கு 3-4 முறை கூட வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஃப்ரைட் ரைஸ்க்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள்.

25

ஆனால் ஃப்ரைட் ரைஸை இப்படி அடிக்கடி வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பொதுவாகவே ஃபஸ்ட்டு புட்களே அதிகமாக சாப்பிடக்கூடாது என்று டயட்டஷியன்கள் எச்சரிக்கின்றனர்.

35

சீனர்கள் கண்டுபிடித்தது தான் இந்த ஃப்ரைட் ரைஸ். இது நம் உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். அதாவது இதில் சேர்க்கப்படும் எண்ணெயானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மட்டுமல்ல, வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல இதில் சேர்க்கப்படும் அதிகளவிலான உப்பு உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

45

உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் இதயம் பாதிக்கப்படும். எனவே இதய நோய் உள்ளவர்கள் ப்ரைட் ரைஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதுபோல அரிசியில் கார்போஹைட்ரேட் உள்ளதால், இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

55

அதுபோல ஃப்ரைட் ரைஸில் சேர்க்கப்படும் சிக்கன், மட்டன் எந்த அளவிற்கு ஆரோக்கியமானது என்பதில் உத்தரவாதமில்லை. ஒருவேளை நீங்கள் ப்ரைட் ரைஸ் சாப்பிட விரும்பினால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக குறைவான எண்ணெய் பயன்படுத்தி வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories