Why Couples are Separated in Aadi Month: இந்து சம்பிரதாயப்படி, ஆடி மாதத்தில் தம்பதிகள் விலகி இருப்பது வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல. இதன் பின்னால் பல அறிவியல் காரணங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
இந்திய கலாச்சாரத்தில் ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு தனி அர்த்தம் உண்டு. இந்து பஞ்சாங்கத்தின்படி, ஆடி மாதம் 'சூன்ய மாதம்' (Shunya Masa) என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த சுப காரியங்களும் நடப்பதில்லை. அதுமட்டுமின்றி, இந்த மாதத்தில் தம்பதிகள் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றொரு வழக்கம் உள்ளது. ஆனால், இது வெறும் மூடநம்பிக்கை அல்ல, இதன் பின்னால் வலுவான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த காரணங்கள் உள்ளன.
ஆடி மாதம் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சிவனை வழிபடுவதற்கும், விரதம் இருப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பூஜை மற்றும் தியானத்தில் ஈடுபடும்போது மனம் அலைபாயக் கூடாது என்பதற்காகவும், பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்காகவும் தம்பதிகள் நெருக்கத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இதனால், உடலின் மனநிலையைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இது ஒருவரின் தூக்கம் மற்றும் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த பருவநிலை மாற்றம் ஆண் மற்றும் பெண்களின் பாலியல் ஹார்மோன்களின் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஆடி மாதத்தில் காற்று மற்றும் மழை பொழிவதற்கான வாய்புகள் அதிகம். இந்த மாதம் காற்றில் ஈரப்பதம் மற்றும் பிசுபிசுப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு மிகவும் ஏற்ற சூழலாகும். இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். தொற்று நோய் அபாயம் இருப்பதால் கணவனிடம் இருந்து மனைவிக்கும், மனைவியிடம் இருந்து கணவருக்கும் தொற்று ஏற்படும் என்பதால் பிரிந்து இருப்பது நல்லது என பெரியவர்கள் கருதியிருக்கலாம்.
காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுகள் (UTI - Urinary Tract Infection) ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. சுகாதாரப் பிரச்சினைகள் - மழைக்காலத்தில் சுத்தமாக இருப்பது ஒரு சவாலான விஷயம். பாதுகாப்பற்ற நெருக்கம் பாக்டீரியா பரவலுக்கு வழிவகுத்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
மழைக்காலத்தில் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பலரும் 'பருவகால மனநல பாதிப்பு' (Seasonal Affective Disorder) என்ற மனநலப் பிரச்சனைக்கு ஆளாகலாம். இது பதட்டம் (Anxiety) மற்றும் மனச்சோர்வை (Depression) அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற மனநிலையில் இருக்கும்போது, தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கம் ஒரு விரும்பத்தகாத சூழலை உருவாக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கருத்து. எனவே ஆடி மாதத்தில் தம்பதிகள் விலகி இருப்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அது மாறும் காலநிலைக்கு ஏற்ப நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு வழிமுறையாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.