Banana Science: வாழைப்பழம் ஏன் வளைந்திருக்கு தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய அறிவியல் ரகசியம்!

Published : Jul 04, 2026, 08:03 AM IST

Banana Science: ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா பழங்கள் எல்லாம் உருளை வடிவில் இருக்கும். ஆனால் ஏழைகளின் ஆப்பிளான வாழைப்பழம் மட்டும் ஏன் வளைஞ்சு இருக்கு? என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? இதற்கு பின்னால் இருகும் அறிவியல் காரணம் குறித்து பார்ப்போம்.

PREV
14
வாழைப்பழம் ஏன் எப்போதும் வளைந்தே இருக்கு?

நாம் சாப்பிடும் ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்கள் உருளை வடிவில் தான் உள்ளன. ஆனால் மிகக்குறைந்த விலையில் நமக்கு ஏராளமான சத்துகளை அள்ளித் தரும் நாம் தினமும் சாப்பிட்டும் வாழைப்பழம் மட்டும் ஏன் உருளை வடிவில் இல்லாமல் ஏன் நேராக கூட இல்லாமல் வளைந்து இருக்கிறது என எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கீர்களா? இது இயற்கையின் ஒரு சிறப்பு மட்டுமல்ல, இதன் பின் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் காரணமும் உள்ளது. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

24
வாழைப்பழம் வளைந்ததற்கு பின்னால் அறிவியல் காரணம்

வாழைப்பழம் வளரும்போதே வளைவாகத்தான் இருக்கும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உண்மையில், பிஞ்சாக இருக்கும்போது வாழைப்பழம் வளைவாக இருக்காது, நேராகத்தான் இருக்கும். அது முதலில் தரையை நோக்கி கீழ்நோக்கி வளரத் தொடங்கும். அதன் வளர்ச்சிப் பருவத்தில்தான் அதன் வடிவம் மாறுகிறது. பொதுவாக, தாவரங்களின் பழங்களும் வேர்களும் பூமியின் புவியீர்ப்பு விசையால் கீழ்நோக்கி வளரும். அறிவியலில் இந்த செயல்முறைக்கு 'பாசிட்டிவ் ஜியோட்ரோபிஸம்' (Positive Geotropism) என்று பெயர்.

இதையும் படிங்க: அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்கலாம்: https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-wrinkles-from-clothes-without-an-iron-4-quick-5-minute-hacks-itkuglu

34
ஃபோட்டோட்ரோபிஸம்

வாழைப்பழம் வளர வளர, அதிக சூரிய ஒளிக்காக மேல்நோக்கித் திரும்பத் தொடங்குகிறது. இப்படி ஒளி இருக்கும் திசையை நோக்கி வளரும் இந்த பண்பை 'நெகட்டிவ் ஜியோட்ரோபிஸம்' (Negative Geotropism) அல்லது 'ஃபோட்டோட்ரோபிஸம்' (Phototropism) என அறிவியல் கூறுகிறது. இதனால்தான் பழம் மெதுவாக வளைந்த வடிவத்தைப் பெறுகிறது.

 ஒருபுறம் புவியீர்ப்பு விசையின் தாக்கம், மறுபுறம் சூரியனின் ஈர்ப்பு. இந்த இரண்டு செயல்முறைகளும் சேர்ந்துதான் வாழைப்பழத்திற்கு அதன் தனித்துவமான வளைந்த வடிவத்தைக் கொடுக்கின்றன. இதனால்தான் வாழைப்பழங்கள் நேராக இல்லாமல், அழகாக வளைந்து காணப்படுகின்றன.

44
ஹார்மோன்களின் வேகம்

வாழையின் தண்டுப் பகுதியில் 'ஆக்ஸின்' என்ற வளர்ச்சி ஹார்மோன் உள்ளது. சூரிய ஒளி பழத்தின் மீது படும்போது, இந்த ஹார்மோன் ஒளியில்லாத நிழல் பகுதிக்கு நகர்கிறது. இதனால் நிழலில் இருக்கும் பகுதி வேகமாக வளர, சூரிய ஒளி படும் பகுதி மெதுவாக வளர்கிறது. இந்த சமமற்ற வளர்ச்சியே பழத்தை மேல்நோக்கி வளைக்கிறது.

அடர்ந்த காடுகளின் மரபு

காடுகளில் பெரிய மரங்களின் நிழலில் வளர்ந்ததால், சூரிய ஒளியைப் பெற வாழைக்கு கடுமையான போட்டி இருந்தது. இலைகளின் மறைவைத் தாண்டி ஒளியை அடைய, பழங்கள் மேல்நோக்கி வளைந்து வளரும்படி அதன் மரபணுக்கள் மாறின.

இதையும் படிங்க: வீட்டை நறுமணமாக்கும் 5 மேஜிக் செடிகள்: https://tamil.asianetnews.com/gallery/life-style/5-low-maintenance-indoor-flowering-plants-for-a-beautiful-home-fodmxsm

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories