10,000 காலடிகள் நடக்குறீங்களா? உடனே நிறுத்துங்க.. 'வாக்கிங்' பத்தின தவறான புரிதல்

First Published | Jan 22, 2025, 9:29 AM IST

10,000 Step Myth : நாள்தோறும் 10 ஆயிரம் காலடிகள் நடந்தால் தான் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது ஒரு கட்டுக்கதை என நிபுணர்கள் கூறுகின்றனர். 

Fitness myths in tamil

தற்போது நடைபயிற்சி ட்ரெண்டாகிவருகிறது. நடப்பது உடல் எடையை குறைப்பதோடு, மனநலனுக்கும் உதவுகிறது. ஆனால் நடப்பது பற்றி மக்களிடையே சில கட்டுக்கதைகளும் பரவி வருகின்றன. அதில் ஒன்றுதான் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது. 

Fitness myths in tamil

10,000 காலடிகள்: 

பெரும்பாலானோர் தினமும் 10,000 காலடிகள் நடைபயிற்சி மேற்கொள்வதை இலக்காக கொண்டிருக்கின்றனர். இதுதான் ஆரோக்கியத்திற்கு உதவும் எனவும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த இலக்கு எல்லோரும் அடையல் கூடிய சாத்தியமான இலக்கு அல்ல. சிலருக்கு கடினமானது. நேரமும், உடலும் ஒத்துழைக்காது. ஒரு நாள் 10 ஆயிரம் காலடிகள் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் சிலர் மனசோர்வடைகிறார்கள். இது தவிர்க்க வேண்டியது.  உண்மையில் குறைந்த காலடிகளை உடலில் ஆரோக்கியமாக பராமரிக்க முடியும் என நம்புனர்கள் தெரிவிக்கின்றனர்.  


Fitness myths in tamil

எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும்? 

டெய்லி ஸ்டாரின் தகவல்களின்படி, அறிவியலாளர்கள் குறைவான காலடிகள் நடப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்றே கூறியுள்ளனர். ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியான (JAMA Network Open) ஆய்விலும், தினமும்  7 ஆயிரத்து 500 காலடிகளுக்கு மேல் நடப்பதால் எந்த கூடுதல் நன்மைகளையும் பெற முடியாது என்றே தெரியவந்துள்ளது. நீங்கள்  7 ஆயிரத்து 500 காலடிகள் நடப்பவராக இருந்தால் மனச்சோர்வு 42% வரை நீங்க வாய்ப்புள்ளது. மனநிலை சீராகும். 

இதையும் படிங்க:  வயசுக்கு ஏத்த வாக்கிங் முக்கியம்!! எந்த வயசுக்கு எவ்வளவு தூரம் நடக்கனும்?

Fitness myths in tamil

நடைபயிற்சி நன்மைகள்: 

நீங்கள் தினமும் மிதமான உடற்செயல்பாட்டை கொண்டிருப்பது உங்களுடைய மனநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு நடைபயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும். நடைபயிற்சியின் பலன்களைப் பெற உங்களால் எதார்த்தத்தில் செய்ய முடிந்த இலக்குகளை நிர்ணயிப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 10 ஆயிரம் காலடிகள் என்பது அதிகமான நேரத்தையும், வேகத்தையும் உங்களிடம் கோருகிறது. இதை தினமும் எட்டுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. நிபுணர்கள் யதார்த்தமான  இலக்குகளை நிர்ணயிக்க பரிந்துரைக்கின்றனர். நீங்கள் அதிகமாக நடக்க முயற்சி செய்து அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை கொண்டு தரக் கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். 

Fitness myths in tamil

எவ்வாறு நடக்க வேண்டும்?

நீங்கள் நடக்கும்போது சில நிமிடங்கள் சுறுசுறுப்பான நடையும், பல நிமிடங்க மெதுவாகவும் நடப்பது பயனுள்ளது. அதாவது 30 நிமிடங்களில் 10 நிமிடங்கள் வேகமாகவும், 20 நிமிடங்கள் மெதுவாகவும் நடக்க வேண்டும். உடல் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க அதிக ஆற்றலை செலவிடும். 

இதையும் படிங்க: வாக்கிங் நல்லதா? ஆரோக்கிய நன்மைகளுக்கு எவ்வளவு நேரம் நடக்கனும் தெரியுமா? 

Fitness myths in tamil

ஆய்வுகளின் தரவுகள்: 

நீங்கள் 4,400 காலடிகள் நடந்தால் ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. திடீர் மரணத்தை குறைக்க தினமும் 8 ஆயிரம் காலடிகள் நடக்கலாம் என லீசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாம் யேட்ஸ் கூறுகிறார். ஒருவர் இதை விட அதிகம் நடக்க தேவையில்லை. அப்படி நடப்பதில் கூடுதல் நன்மைகள் ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Latest Videos

click me!