
பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் ஒளிரும், மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மாசுப்பாடு காரணமாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். எனவே, இவற்றை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்படுவார்கள். அந்தவகையில், சரும பராமரிப்புக்கு கடலை மாவு ரொம்பவே நல்லது. இது முகப்பரு மற்றும் முகத்தில் இருக்கும் கறைகளை நீக்கும். இதுதவிர, முகத்திற்கு பளபளப்பையும் கொடுக்கும். எனவே, உங்கள் முகத்தில் பளபளப்பைப் பெற விரும்பினால், சில பொருட்களை கடலை மாவுடன் கலந்து அதை ஃபேஸ் பேக்காக போட்டுங்கள். அது என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
கடலை மாவு & தயிர் ஃபேஸ் பேக்:
கடலை மாவு மற்றும் தயிர் கலவையானது உங்களது சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்கும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 தயிர் மற்றும் 1/2 எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்தை பொழிவாக்கும்.
கடலை மாவு & மஞ்சள் ஃபேஸ் பேக்:
கடலை மாவு மற்றும் மஞ்சள் இவை இரண்டையும் ஃபேஸ் பேக்காக போட்டால் முகத்தில் இருக்கும் சரும பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்கும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இதையும் படிங்க: கேரட் பேஸ் ஃபேக் தெரியுமா?ஒரே நாளில் தங்கம் மாதிரி முகம் ஜொலிக்கும்!!
கடலை மாவு & ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்:
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் முகத்திற்கு ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சியாக வைக்கும். இதை செய்ய 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1-2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினமும் முகம் ஜொலி ஜொலிக்க இந்த '6' ஃபாலோ பண்ணுங்க!
கடலை மாவு & தேன் ஃபேஸ் பேக்:
கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். மேலும், முகத்தை பளபளப்பாக்கும் மற்றும் கறைகளை நீக்கவும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
முக்கிய குறிப்பு :
- இந்த ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே போட வேண்டும்.
- எந்தவொரு ஃபேஸ் பேக்குகளை போடும் முன் உங்களது முகத்தை ஈரப்பதமாக மறக்காதீர்கள்.
- முக்கியமாக பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள்.