Hot Water Bath in Winter Days
வெந்நீர் குளியல் என்பது, பலர் தினமும் மேற்கொண்டு வரும் ஒரு ஒன்று தான். குறிப்பாக குளிர் காலங்களில், சளி மற்றும் குளிர் காரணமாக வெந்நீர் குளியலையே பலர் விரும்புகிறார்கள்.
Damage the Skin
பிறந்த குழந்தைகளுக்கு பலர் மிகவும் சூடான தண்ணீரை ஊற்றுகிறார்கள். இதனால் குழந்தைகள் உடல் சிவந்து போய் அவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும், உடல் பொறுக்க முடியாத அளவுக்கு சூடு தண்ணீர் ஊற்றி குளிப்பது மூலம் தோலின் மேல்தோல் அடுக்கில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் அபாயம் உண்டு. எனவே மிதமான சூட்டுடன் மட்டுமே குளிக்க வேண்டும்.
Pore
சூடான தண்ணீரில் இருந்து வெளியே வரும் நீராவிகள், உங்கள் தோல் துளைகளைத் திறக்க செய்வதால், அதன் அளவை விட பெரியதாக தோன்றும். இப்படி துளைகள் பெரிதாவது, முக அழகை கெடுப்பது மட்டும் இன்றி... இறந்த செல்கள், அழுக்கு மற்றும் பிற அசுத்தங்கள் தங்குவதற்கு வழிவகுக்கும். இதனால் முகத்தில் கட்டி மற்றும் இபெக்ஷன் ஏற்படலாம்.