
ஆண்களுடைய ஹார்மோன் சரியாக வேலை செய்யும்போது தான் அவர்களுடைய ஆண்மையின் பலமும் வீரியமாக இருக்கும். அவர்களுடைய உடலில் ஆண்மையை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பருவமடையும் காலத்தில் தான் அதிகரிக்கும். இந்த ஹார்மோன் தான் பெண்களிடமிருந்து ஆண்களை வேறுபடுத்தி காட்டும் பண்புகள் ஆண்களுக்கு வழங்குகிறது. இதுவே ஆண்களின் பாலியல் உணர்வுகளை தூண்டி விழிப்புணர்வை வழங்கும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு ஆண்களுக்கு முக்கியமானது. ஆண்மைக்கும் அதற்கும் பலமான தொடர்புண்டு. அவசரகதியாகி போன வாழ்க்கையில் இந்த காலத்து ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகவே உள்ளது. இப்படி அந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும் ஆண்களுக்கு பாலுணர்வு குறைவாக காணப்படும். இப்படி டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பிரச்சனையால் ஆண்மை பலம் குறைவாக காணப்படும் ஆண்கள் அதிகமாகி வருகின்றனர்.
டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு:
அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் மரங்களை வெட்டுவது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் உடனடி தீர்வாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். அவர்களின் ஆய்வின் முடிவில் 48% வரைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க மரங்களை வெட்டுவது உதவியதாக தெரிகிறது. விறகு வெட்டுதல், மரக்கட்டைகளை சிறிய துண்டாக வெட்டுதல் போன்றவவை டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பு குறித்த புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு தந்தது.
புதிய திருப்புமுனை:
இந்த ஆய்விற்காக அமேசான் காடுகளில் மரங்களை வெட்டும் ஆட்களிடம் இருந்து உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மரங்களை வெட்டிய ஆண்களுடைய டெஸ்டோஸ்டிரோனின் அளவு ஆச்சரியத்தை தந்ததாக ஆய்வு மேற்கொண்ட கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பென் ட்ரம்பிள் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவுகள் மறுமலர்ச்சி மற்றும் மனித நடத்தை (Evaluation and Human Development) என்ற இதழில் வெளியானது.
இதையும் படிங்க: ஆண்களே, இயற்கையாகவே 'அந்த ஹார்மோன்’ அளவை அதிகரிக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
எப்படி ஆண்மை அதிகரிக்கும்?
ஒரு மணி நேரம் எந்த ஆண் விறகு அல்லது மரம் வெட்டினாலும் அவர்களுடைய உமிழ்நீரில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 48 சதவீதம் உயர்வதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுறுசுறுப்பாக கால்பந்து விளையாடினால் கூட 30.1 சதவீதம் தான் அதிகரிக்கிறதாம்.
இதையும் படிங்க: ஆண்களுக்கு 'அந்த' பிரச்சனை இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள் இவையே!
டெஸ்டோஸ்டிரோனின் என்ன செய்யும்?
டெஸ்டோஸ்டிரோன் அதிகளவு சுரப்பதால் தசைகளின் செயல்திறனை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் பாலுணர்வை தூண்டக் கூடியது. ஒரு ஆணின் பாலியல் விருப்பம், விந்தணு உற்பத்தி ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் தொடர்புடையது. இது சரியாக இல்லாவிட்டால் ஆண்மை குறைபாடு வரலாம். அதாவது பாலியல் விருப்பம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. உடலுறவின் போது விறைப்புத்தன்மை கோளாறு வரவும், இந்த ஹார்மோன் சுரப்பு குறைவது காரணமாகிவிடும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் மனநிலையும் பாதிக்கும். மனச்சோர்வு ஏற்படலாம். ஆகவே டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். இந்த ஹார்மோன் பாலியல் தேவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவும். உடனடியாக டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க விறகு வெட்டலாம்.