
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதால் தான் தங்களது குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களால் முடிகிறது. மேலும் இதற்காக அவர்கள் ரா பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். இப்படி தாய் தந்தை இருவரும் வேலை நிமித்தமாக ரொம்பவே பிஸியாக இருப்பதால் அவர்களால் தங்களது குழந்தைகளுடன் சரியான நேரத்தை செலவிட முடியாமல் போகிறது. இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்குகிறது. இதன் காரணமாக குழந்தைகள் தனிமையை அதிகமாக உணர்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களது உணர்வுகளை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இதே பிரச்சினையை தான் அனுபவிக்கிறீர்களா? அதாவது உங்களால் உங்களது குழந்தைகளுக்கு சரியாக நேரம் கொடுக்க முடியாமல் போகிறதா? ஆம், என்றால் இந்த பதிவு உங்களுக்கு ஆனது தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும். குறைந்த நேரத்திலும் உங்கள் குழந்தைகளுடன் சில தருணங்களை உங்களால் அனுபவிக்க முடியும். இதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனவே, அந்த சிறப்பு விஷயங்கள் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
கதைகள் சொல்லுதல்:
குறுகிய நேரத்திலும் உங்கள் குழந்தையுடன் ஒவ்வொரு தருணங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், சில கதைகள் அல்லது ஏதாவது நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு அவர்கள் உங்களை எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்வார்கள். இது தவிர, குறைந்த நேரத்திலும் உங்கள் குழந்தையுடன் நீங்கள் விளையாடலாம். இதனால் உங்களது குழந்தை ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் நீங்களும் உங்கள் குழந்தையுடன் இருந்த இந்த பொன்னான தருணங்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.
இதையும் படிங்க: இரவில் குழந்தைங்க துணிய வெளியில் காய போடாதீங்க... அறிவியல் காரணமே இருக்கு!!
படம் வரைதல் மற்றும் கைவினை செய்தல்:
உங்கள் குழந்தையுடன் நீங்கள் சிறிது நேரம் நேரத்தை செலவிட விரும்பினால் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது சில ஓவியங்களை வரையலாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் நாள் முழுவதும் நீங்கள் அவர்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் குழந்தை உங்களுடன் சேர்ந்து வரைந்த படத்தை பார்த்து உங்களது நினைத்துக் கொள்வார்கள். மேலும் அந்த நாளை மகிழ்ச்சியாகவும் கழிப்பார்கள். இது தவிர ஏதாவது ஒரு கைவினை பொருட்களை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். உங்கள் குழந்தை அதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: பெர்பியூம் போடுற குழந்தைகளுக்கு 'கணக்கு' வராதாம்.. ஏன் தெரியுமா?
சமையலறையில் உங்களுடன்:
நீங்கள் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் சமையல் வேலைகளை செய்கிறீர்கள் என்றால் அப்போது உங்கள் குழந்தையையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சமையல் செய்து கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தையுடன் நிறைய விஷயங்களை பேச முடியும். சொல்ல போனால் நீங்கள் உங்கள் குழந்தையுடன் நிறைய நேரம் செலவிட முடியும். அதுபோல நீங்கள் பொருட்களை வாங்க வெளியே செல்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்கள் குழந்தையையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இதன் மூலம் குறைந்த நேரத்திலும் உங்கள் குழந்தையுடன் நீங்கள் நல்ல தருணத்தை அனுபவிக்க முடியும்.
இதையும் செய்யுங்கள்:
- தூங்கும் போது உங்களுக்கு குழந்தைக்கு கதை சொல்லுங்கள். அதுபோல நீங்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் செல்போனில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக, உங்கள் குழந்தை இடம் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் குழந்தை சொல்லும் எல்லா விஷயங்களையும் கவனமாக கேளுங்கள். நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டும் விதமாக அவர்களை அணைத்துக் கொள்ளுங்கள், முத்தமிடுங்கள்.
- மேலும் உங்கள் குழந்தை செய்யும் சிறிய சாதனைகளை கூட நீங்கள் அவர்களை பாராட்டி ஊக்குவிக்கவும் இதனால் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மேலே சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் குறுகிய நேரத்திலும் உங்கள் குழந்தையுடன் மறக்க முடியாத தருணங்களை அனுபவிக்க முடியும்.