Kitchen Tiles Oil Stain Cleaning : கிச்சன் டைல்ஸில் இருக்கும் கடுமையான எண்ணெய் பிசுபிசுப்பு கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாக கடுமையான எண்ணெய் கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கிச்சன் ஸ்டவ்வுக்கு பின்னால் இருக்கும் டைல்ஸில் படிந்திருக்கும் கடுமையான எண்ணெய் கறையை சுத்தம் செய்வதற்குள் கை, கால் வலியே வந்துவிடும். சமைக்கும்போது கிச்சனில் ஆங்காங்கே எண்ணெய் கறை படிந்து விடும். அதை உடனே சுத்தம் செய்யாவிட்டால் பிசுபிசுப்பாகி பிறகு அதை சுத்தம் செய்வதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.
24
kitchen tiles oil stain cleaning tips in tamil
ஆனால் எப்படிப்பட்ட கடுமையான எண்ணெய் கறையையும் கூட சுலபமாக சுத்தம் செய்வதற்கு வழி ஒன்று உள்ளது. இதற்காக நீங்கள் பேக்கிங் சோடா, வினிகர், கிளீனிங் லிக்விட், எலுமிச்சை போன்ற எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு பொருள் மட்டும் போதும். அதை வைத்து கிச்சன் டைல்ஸில் படிந்திருக்கும் பிடிவாதமான எண்ணெய் கறையை சுலபமாக நீக்கிவிடலாம். அது என்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிச்சன் டைல்ஸில் படிந்திருக்கும் கரையை நீக்க 'தின்னர்' (Thinner) மட்டும் போதும். இதன் விலை கூட அவ்வளவு அதிகம் இல்லை. இது உங்கள் வீட்டின் கிச்சனில் படிநிதிருக்கும் எண்ணெய் கறையை சுலபமாக சுத்தம் செய்து விடும். இதற்கு ஒரு காட்டன் துணியில் கொஞ்சமாக தின்னரை தொட்டு எண்ணெய் படிந்திருக்கும் டைல்ஸில் துடைத்தால் போதும். எண்ணெய் கறை முற்றிலும் நீங்கிவிடும். லேசான கறை என்றால் உடனே நீங்கிவிடும். அதுவே நீண்ட நாள் படிந்திருக்கும் கறையை பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப் கொண்டு தேய்க்க வேண்டும்.
- டைல்ஸில் தின்னரை கொண்டு சுத்தம் செய்த பிறகு மீண்டும் ஈரமான துணைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னதாக அடுப்பை பற்ற வைக்க வேண்டாம்.
- முக்கியமாக தின்னரை கொண்டு சுத்தம் செய்வதற்கு முன்னர் அடுப்பை அணைத்து விடுங்கள். கேஸ் சிலிண்டரையும் அணைக்க மறக்காதீர்கள்.
- எக்காரணம் கொண்டும் தின்னரை கிச்சனில் வைக்க வேண்டாம்.
இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள். பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.