Lung Damage Symptoms : உங்கள் உடலில் இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். அவை அனைத்தும் நுரையில் பிரச்சினையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்பினால் நுரையீரல் ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனெனில் நுரையீரல் தான் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது ரத்தத்திற்கு ஆக்சிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றது. மேலும் நுரையீரல் சேதமடைந்தால் அதன் விளைவு முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உங்களுக்கு தெரியுமா.. நுரையீரல் சேதமடைவதற்கு முன் சில அறிகுறிகள் நம்முடைய உடலில் தோன்றும். எனவே, இப்போது இந்த பதிவில் நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
25
Lung Damage Symptoms in Tamil
மூச்சு திணறல்:
நாம் ஏதேனும் கடினமாக வேலை செய்யும் போதோ அல்லது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவது ஒரு பொதுவான விஷயம். அதுவே சிறிய வேலைகளை செய்யும் போது, இருமும்போது மூச்சு திணறல் ஏற்பட்டால் அது கவலைக்குரிய விஷயம். நீங்கள் அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களது நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதற்கான அறிகுறி இது.
35
Lung Damage Symptoms in Tamil
அடிக்கடி இருமல்:
இரவில் தூங்கும் போது அடிக்கடி இருமல் வந்தால் அதுவும் நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆம், நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் மீண்டும் இருமல் உங்களுக்கு வந்தால் உங்களுக்கு நுரையீரலில் தொற்றி இருப்பதை குறிக்கிறது. மேலும் உங்களுக்கு இருமல் திடீரென அதிகரித்தால் அல்லது இடையில் ஏற்பட்டால் உங்களது நுரையீரல் தீவிர பிரச்சனையில் உள்ளது என்பது காட்டுகிறது.
நுரையீரல் மோசமடைய தொடங்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே நீங்கள் சிறிது தூரம் நடந்து சென்றாலே உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நுரையீரல் சேதத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறி இது.
நீங்கள் இரும்பும் போது நெஞ்சுவலி ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். அதுவும் குறிப்பாக அடிக்கடி இது மாதிரி நடந்தால் உங்களது நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இருமலின் போது நெஞ்சுவலி ஏற்பட்டால் உங்களது நுரையீரலில் தொற்றி அல்லது ஏதேனும் அலர்ஜி இருக்கிறது என்பதை குறிக்கிறது.