
நெல்லிக்காய் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது வைட்டமின் சி-யின் நல்ல ஆதாரமாகும். இது தவிர இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் ஈ, கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். உணவுடன் பல வேகையான மருந்துகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஒரு சிலருக்கு நெல்லிக்காய் ஜூஸ் உடலில் எதிர்மறையான விளைவுகளில் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது யாரெல்லாம் என்று இங்கு பார்க்கலாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்:
உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் நீங்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டாம். ஏனெனில் நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அதன் அமிலத்தன்மை காரணமாக செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யும். இதன் காரணமாக அமில வீச்சு அல்லது வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும்.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள்:
நெல்லிக்காய் ஜூஸில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே, உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் நீங்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதுபோல இதில் இருக்கும் வைட்டமின் சி சிறுநீரக கற்களை உண்டாக்கும்.
இதையும் படிங்க: வெறும் கறிவேப்பிலையா? நெல்லிக்காய் கூட ஜூஸ் குடிச்சு பாருங்க.. எண்ணிலடங்கா நன்மைகள்!!
அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள்:
உங்களுக்கு அதிகளவு அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் குடிக்கவே கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் அவல பண்புகள் பிரச்சனையை மேலும் மோசமாகும்.
அறுவை சிகிச்சை:
நீங்கள் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்கள் என்றாலோ நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டாம். ஒருவேளை அதை குடித்தால் உங்களுக்கு ரத்தப்போக்கு பன்மடங்கு அதிகரிக்கும்.
இதையும் படிங்க: சொன்னா நம்பமாட்டீங்க.. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள்:
நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும் முறையற்ற நுகர்வு அடிவயிற்றில் இறுக்கம், அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை குடிப்பது நல்லதல்ல என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். அதுபோல பாலூட்டும் பெண்களும் குடிப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள்:
நெல்லிக்காய் ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை உள்ளது என்பதால், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பிபி பிரச்சனை உள்ளவர்கள்
நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும் நுகர்வு ரத்தம் மெலிவுறுதலுக்கு வழிவகுக்கும் .எனவே உங்களுக்கு டிபி பிரச்சனை இருந்தால் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பல் சிதைவு பிரச்சனை உள்ளவர்கள்:
உங்களுக்கு பல் சிதைவு உள்ளிட்ட வாய்வழி பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது என்கின்ற நிபுணர்கள். ஏனெனில் நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும் நுகர்வு பற்பிசையை பாதிக்க செய்யும்.