
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாகும். பூண்டில் இருக்கும் காரமான தன்மை உணவின் சுவையை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் குறிப்பாக, குளிர்காலத்தில் நம்மை ஆரோக்கியமாக வைக்க இது உதவுகிறது. அதனால்தான் இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது
பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சளியை அகற்ற, ரத்த அழுத்தத்தை குறைக்க, புற்றுநோய் செல்களை அழிக்க, ரத்த சர்க்கரை அளவை குறைக்க இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகிறது. இதனால்தான் தினமும் பூண்டு சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்
பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், சிலருக்கு இது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு எடுத்துக் கொள்வது நல்லதல்ல. எனவே யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதையும் படிங்க: முளைவிட்ட பூண்டை சாப்பிடலாமா? பூண்டு ஏன் முளைக்குது தெரியுமா?
யாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது?
1. வயிற்றுப்போக்கு:
வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக பூண்டு சாப்பிடக் கூடாது. மீறினால், அதில் இருக்கும் காரமான தன்மை குடலை தூண்டி வயிற்றுப்போக்கு பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும்.
2. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்:
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் ஏனெனில், பூண்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கூறுகள் நெஞ்செரிச்சல், வயிற்று தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இரைப்பை உணவுகளை அலர்ஜி நோயையும் ஏற்படுத்தும்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள்:
பொதுவாகவே பூண்டு அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் அதிலிருக்கும் சல்பர் தான். அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஏற்கனவே பாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் பூண்டு சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வாய் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும்.
4. இரத்த போக்கு பிரச்சினை உள்ளவர்கள்:
இரத்த போக்கு பிரச்சினை மற்றும் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் பூண்டு சாப்பிடுவது ஆபத்து. ஏனெனில் பூண்டு அவர்களின் பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதாவது, ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் பூண்டு சேர்ந்தால், உடலில் இரத்த போக்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
5. கர்ப்பிணிகள் & தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்:
கர்ப்பிணிகள் & தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது என்றாலும் இது அதிகமாக எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பை குறைத்துவிடும்.
6. அலர்ஜி உள்ளவர்கள்:
சிலருக்கு பூண்டு சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். இது அவர்களுக்கு வீக்கம், படை நோய், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் பூண்டு சாப்பிடும்போது இந்த மாதிரியான அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
7. அதிக வியர்வை:
சிலருக்கு அதிகமாக வியர்வை நாற்றம் அடிக்கும். அப்படிப்பட்டவர்கள் பூண்டு சாப்பிட்டால் அவர்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். எனவே, இத்தகையவர்கள் பூண்டு சாப்பிட வேண்டாம்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் '2' பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் நீங்குமா?