
பொதுவாகவே ஒவ்வொரு தாய்மார்களும் தங்களது குழந்தையை குளிப்பாட்டிய பிறகு அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பவுடர் பூசுவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனால் குழந்தைகள் நாள் முழுவதும் வாசனையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பார்கள் என்று அவர்களது நம்பிக்கை. நீங்களும் இதே மாதிரி உங்கள் குழந்தைக்கு செய்கிறீர்களா? ஆனால் இது நல்லதா என்று எப்போது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
உண்மையில், குழந்தைக்கு பவுடர் போடுவது அவசியமில்லாதது தான். ஏனெனில் சில சமயங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பவுடர் போடும் போது அது அவர்களது நுரையீரலுக்கு சென்று இதனால் மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை, நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவதற்கு வழி வகுக்கும் தெரியுமா?
ஆம், குழந்தைகளுக்கு போடும் பவுடரில் இருக்கும் 'டயலாக்' என்னும் கனிம கலவையில் இருந்து தான் பவுடர் தயாரிக்க உதவுகிறது. மேலும் இது ஆஸ்பெஸ்டாஸ் என்னும் பொருளை கொண்டுள்ளது. அது புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளுக்கு பவுடர் போடும்போது அதை அவர்கள் சுவாசிக்கும் போது அது அவர்களது நுரையீரலுக்கு சென்று புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே ஒவ்வொரு தாய்மார்களின் தங்களுக்கு குழந்தைக்கு பவுடர் போடும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
இதையும் படிங்க: குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!
குழந்தைகளுக்கு பவுடர் போடும்போது தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை:
- தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பாடல் போடும்போது நேரடியாக முகத்தில் போடுவதற்கு பதிலாக ஒரு துணியில் பவுடரை தட்டி பிறகு குழந்தைகளுக்கு போடவும்.
- குழந்தைகளுக்கு பவுடர் போடும்போது அவர்களின் கண், வாய், மூக்கு போன்ற இடங்களில் பவுடர் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
- அதுபோல குழந்தைகளை குளிப்பாட்டி வந்த உடனே அந்த ஈரத்துடன் பவுடர் போட வேண்டாம். குழந்தைகளின் சருமத்தை ஒரு டவளால் நன்கு துடைத்து அவர்களது சருமம் நன்கு உலர்ந்த பிறகு தான் பவுடர் போட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- மேலும் குழந்தைக்கு டயப்பர் போடும் முன் அவர்களது அந்தரங்க பகுதியில் பெரும்பாலான தாய்மார்கள் பவுடரை அள்ளி போடுவார்கள். ஆனால் அது தவறு. இதனால் குழந்தையின் அந்த பகுதிகளில் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக குழந்தையின் கை, கால்கள் தொடை பகுதிகளில் பவுடர் பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு :
குழந்தைக்கு நீங்கள் பவுடர் பயன்படுத்து முன் அது தரமானதா என்று மருத்துவரை அணுகிய பிறகு பயன்படுத்துங்கள் இல்லையெனில் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதுபோல குழந்தைகளுக்கு பவுடரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். அளவாகவே பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையை குளிர்காலத்துல சூரிய ஒளியில் காட்டுவது ஏன் அவசியம் தெரியுமா?