Empty stomach: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய முடியலையா..? அப்படினா..இனிமேல் இதை பாலோ பண்ணுங்கள்..

First Published Sep 26, 2022, 11:51 AM IST

Empty stomach exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதுவே, செய்ய முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும். என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் கொழுப்பு கரைதலின் அளவு அதிகரித்துவிடுகிறது. அதுவே, செய்ய முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும். என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டுமா?
 
ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னதாகவோ, அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரோ ஏதாவது சாப்பிடுவது மிகவும் முக்கியம்.  

உங்கள் உடலுக்கு போதுமான எரிபொருளைப் பெற உணவு உதவுகிறது, ஜிம்மிற்குச் செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் போது தசைகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கும். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக உணவு உண்பது அவசியம்.

என்ன சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன், வாழைப்பழம் சில துண்டு ஆப்பிள்,  ஒரு ஸ்பூன் வெண்ணெய், அல்லது அரை அவித்த முட்டைபோன்றவை சாப்பிட்டால் போதும்.

அதேபோன்று, உடற்பயிற்சிக்குப் பின்னர், கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து உணவை அருந்தலாம்.

பயன்கள்:

இதன் மூலம் உங்கள் பசி, எண்ணம் குறைவதுடன், உடற்பயிற்சிக்கு தேவையான ஊக்கத்தை  அது கொடுக்கிறது. உடற்பயிற்சியின் போது கலோரி எரிவதற்கு இது துணைபுரிகிறது.

வொர்க்அவுட்டின் போது ஏற்படும் காயங்களைத் தடுக்கவும் இந்த பழக்கம் உதவுகிறது. உடற்பயிற்சியை செய்ய திட்டமிடும்போதும், செய்யத் தொடங்கும் போதும், அதன் ​​அதிகபட்ச முடிவுகளைப் பெற விரும்புகிறோம்.  

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

அதை சரியான முறையில் பெற வேண்டுமானால், உடலில் சக்தி அவசியம். தசையை இழுப்பதன் மூலமோ அல்லது உடல் உறுப்பைக் கஷ்டப்படுத்துவதன் மூலமோ அல்லது சோர்வடைவதன் மூலமோ அடிக்கடி நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். 

உடலுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இருந்தால், காயங்களைத் தவிர்க்கலாம் மற்றும்  உங்கள் வொர்க்அவுட் உண்மையான பலனைத் தரும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

இருப்பினும், உடற்பயிற்சிக்கு முன் பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

யாரெல்லாம் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யக் கூடாது?

குறிப்பாக, 55 வயதுக்கு மேற்பட்டோர் காலையில் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யக்கூடாது. அவர்களுக்கு குறைந்த சர்க்கரை அளவு இருந்தால் அன்று நாள் முழுவதும் தலை சுற்றல், சோம்பேறித்தனம் போன்றவை ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

click me!