நவராத்திரி முதல் நாள் இன்று..நாம் செய்ய வேண்டிய பூஜைகள், கிடைக்கும் பலன்கள்..பற்றிய முழு விவரவம் உள்ளே..!

First Published | Sep 26, 2022, 10:03 AM IST

Navaratri 2022: நவராத்திரி முதல் நாள், செப்டம்பர் 26 இன்று நாம் என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நவராத்திரி கொண்டாட பல வீடுகளிலும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவரின் வழக்கத்திற்கு ஏற்ப நவராத்திரியை மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர்.கொலுவைக்கும் பழக்கம் இருப்பவர்கள் பழைய பொம்மைகளுக்கு கொலுவுக்கு தயார் செய்து, புதிய பொம்மைகள் வாங்கி, வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து, நவராத்திரிக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி, 9 நாட்களும் அம்பாளை கொண்டாடுவதற்கு  தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க..கொலு எந்த வரிசையில் எந்த பொம்மை.. என்பதில் ஒளிந்திருக்கும் உண்மை!

நவராத்திரி பண்டிகை நாளில், அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள் கோலாகலமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரங்கள் செய்து, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த நவராத்திரி நாட்களில், அம்பாளுக்கு ஒவ்வொரு விதமான நைவேத்தியம், மலர், தினமும் ஒரு விதவிதமான ராகம் மற்றும் வாத்தியங்கள், பூஜையில் பாராயணம் செய்ய மந்திரங்கள் என்று அன்றாடம் ஒரு திருவிழாவே வீட்டில் நடக்கும் அளவுக்கு நவராத்திரி அவ்வளவு சிறப்பான பண்டிகையாகும்.

 மேலும் படிக்க..Navaratri 2022: நவராத்திரி நாளில் என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? கட்டாயம் தெரிந்து வச்சுக்கோங்கோ..

Tap to resize

நவராத்திரி முதல் நாளான, இன்று செப்டம்பர் 26 அன்று என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

நவராத்திரிக்கு கொலு..?

நவராத்திரிக்கு கொலு வைப்பதே ஒரு பண்டிகை போல கோலாகலமாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு வைத்து நாள்தோறும் வெகு சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டாடுவதுண்டு.  கொலு வைக்கும் முன்பு, படிகள் மீது பட்டு புடவை அல்லது புதிய புடைவை அல்லது துணி சாற்றி, அதன் பிறகுதான் பொம்மைகளை அடுக்க வேண்டும். எனவே கொலு வைப்பதற்காக புதிதாக புடவை வாங்கலாம் அல்லது பட்டு துணி சாற்றினாலும் பொருத்தமாக இருக்கும். பிறகு கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். அல்லது, அபிராமி அந்தாதி ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். 

மேலும் படிக்க..Navratri: நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்...முப்பெரும் தேவியர்கள் வழிபாடு ஏன் சிறப்பு வாய்ந்தது..?
 

எப்படி பூஜை மற்றும் வழிபாடு செய்வது...?

நவராத்திரியின் முதல் நாளன்று, கொலு வைக்கப்பட்ட இடத்தில், அரிசி மாவில் கோலம் போட்டு, மகேஸ்வரி என்ற சக்தியின் வடிவத்தில் இன்று தேவியை வணங்கி வழிபட வேண்டும். முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த தேவிக்கு மல்லிகைப் பூக்கள் இன்று மிகவும் உகந்தவை ஆகும். தோடி ராகத்தில் பாடினால் அல்லது இசைத்தாலும் வாழ்வில் சுபிட்ஷம் உண்டாகும், வாழ்நாள் நீடிக்கும், வறுமை அகலும். நைவேத்தியமாக படைக்கப்பட்ட உணவை, வீட்டில் இருக்கும் சிறுமிகளுக்கு முதலில் சாப்பிடக் கொடுக்கலாம். கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

மேலும் படிக்க..Navratri 2022: தமிழ்நாட்டில் நவராத்திரி இத்தனை சிறப்பு வாய்ந்ததா.? அதன் பாரம்பரியம் பற்றிய முழு விவரம் உள்ளே..

  அகண்ட தீபத்தின் சிறப்பு 

நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம். காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.
 

நவராத்திரி நாள் 1: செப்டம்பர் 26, திங்கட்கிழமை

பூஜைக்கு சிறந்த நேரம்: மாலை 4.45 - 5.45 மணி, 7.30 - 8.30 மணி.

நிறம்: வெண்மை

திதி: பிரதமை

ராகம்: தோடி

நைவேத்தியம்: காலை நேரத்தில் வெண் பொங்கல் மற்றும் வெள்ளை கொண்டைகடலை சுண்டல்

மகேஸ்வரி தேவியை வழிபடுவதற்கு செய்ய வேண்டிய மந்திரம்:

 மந்திரம்:

ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி

ப்ரசோதயாத்

பலன்கள்: செல்வ விருத்தி, ஆயுள் விருத்தி, கடன் மற்றும் வறுமை நீங்கும்.

மேலும் படிக்க..Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
 

Latest Videos

click me!