Green Tea: வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் என்ன பிரச்சனை..? நிச்சயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.!

First Published Sep 26, 2022, 8:03 AM IST

Green Tea Side Effects: இன்றைய கால கட்டத்தில், உடல் எடையை குறைக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்த கிரீன் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. 

இன்று உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம் கிரீன் டீ  ஆகும். இன்றைய கால கட்டத்தில், எடை குறைப்பு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் இயல்பான வெப்பநிலையை சீராக்குவது போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ மிகவும் பிரபலமானது. ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒருவராக நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம் கிரீன் டீ குடிப்பது என்ற நிலை உள்ளது. 
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்

ஆனால், இந்த அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற சரியான முறையில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். ஆம், பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட கிரீன் டீயை மற்ற நேரம் உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதன்படி, கிரீன் டீயைக் குடிப்பதற்கு எது சரியான நேரம், எந்த அளவில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். 
 

கிரீன் டீ உடலுக்கு பல நன்மைகலை அளிக்கும் என்றாலும், அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆம், நம்பமுடியாததாக இருந்தாலும், கிரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால் காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காலையில் கிரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும். 

ஏனெனில், கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும், இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம். 

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்


நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்கலாம்?

பொதுவாக ஒரு நாளைக்கு 1-2 கப்புக்கு மேல் க்ரீன் டீ குடித்தால் அது ஆபத்தாகலாம்.  அதிகப்படியான கிரீன் டீ உண்மையில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அல்லது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். மேலும், சாப்பிட்ட உடனேயே கிரீன் டீயைக் குடிக்காதீர்கள். இது அமிலத்தன்மை, வீக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுக்கு 30-45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது. 

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: ஏழரை சனி ஆரம்பம்..சனியின் பாதிப்பிலிருந்து., தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் 3 ராசிகள்

click me!