காதலித்து திருமணம் செய்து கொண்ட, உங்கள் துணை உங்களை வெறுக்கிறாரா..? இந்த 7 வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்!

First Published Sep 26, 2022, 7:03 AM IST

Vastu Tips for Bedroom: இன்றைய காலத்தில் காதல் திருமணத்தில் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நீங்கள் தேவையான இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Vastu Tips for Bedroom

இன்றைய காலத்தில் காதல் திருமணம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். 

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

Vastu Tips for Bedroom

இன்றைய காலத்தில் காதல் திருமணத்தில் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, நீங்கள் தேவையான இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால், உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சுவர் பெயிண்ட்:

படுக்கையறையின் சுவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் இது காதல், மகிழ்ச்சி மற்றும் காதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
 

Vastu Tips for Bedroom

படுக்கையறை

தென்மேற்கு மூலையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஏனெனில், இந்த மூலை காதல் மற்றும் திருமணத்தை குறிக்கிறது. எனவே உங்கள் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இந்த திசையில் சூரியன் மறைவதால், இது நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது.

Vastu Tips for Bedroom

விளக்குகள்:

படுக்கையறை விளக்குகள் உங்கள் மனநிலையையும் அதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கையையும் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் படுக்கையறையின் தென்மேற்கு திசையில் சிவப்பு அல்லது மஞ்சள் விளக்கை வைக்கவும். ஏனெனில், இந்த மூலை அதிர்ஷ்டம், காதல் மற்றும் நீண்ட கால உறவை ஈர்க்கிறது.

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

Vastu Tips for Bedroom

படுக்கையறை அலங்காரம்

உங்கள் படுக்கையை இரண்டு சுவர்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்கவும், இதன் விளைவாக, உறவில் விரிசல் ஏற்படும்.

புகைப்படங்கள்

உங்கள் இருவரின் அழகான புகைப்படங்கள் எப்போதும் மகிழ்ச்சியான தருணங்களை உங்களுக்கு நினைவூட்டும். எனவே, படுக்கையறையில் நீங்கள் மற்றும் உங்கள் துணையின் வேடிக்கையான அல்லது காதல் புகைப்படத்தை வைக்கவும். 
 

Vastu Tips for Bedroom


வேலை தொடர்பான பொருட்கள்:

உங்கள் படுக்கையறைக்கு வெளியே வேலை தொடர்பான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் துணையின் மீது கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இதில் உங்கள் கணினி, ஐபோன், ஆவணங்கள் அடங்கும்.

Vastu Tips for Bedroom

கண்ணாடி:

 படுக்கையில் உங்கள் பாதத்திற்கு எதிரே கண்ணாடியை மற்றும் கடிகாரம் வைக்க வேண்டாம். இது பிரிவினைக்கு வழிவகுக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை ஊக்குவிக்கிறது.எனவே, மேலே குறிப்பிட்ட வாஸ்து முறைகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க..ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..
 

click me!