
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் காலம் காலமாக பின்பற்றி வருகிறோம். காரணம் எண்ணெய் தேய்த்து குளியல் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறை மத்தியில் இது குறைந்து வருகின்றது. எனவே, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நம்முடைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு அந்நாள் முழுவதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடித்து வந்தால் மட்டுமே எண்ணெய் குளியலுக்கான முழு பலனும் நமக்கு கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடல் வெப்பம் தணியும்:
பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவோம். எனவே சூரிய உதயத்திற்கு பிறகு வரும் இளம் வெயிலில் எண்ணெய் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து தான் வெந்நீரில் குளிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வாரம் ஒரு முறை இப்படி குளித்து வந்தால் உடல் சூட்டு தணியும்.
வைட்டமின் டி கிடைக்கும்:
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் வைட்டமின் டி நம்முடைய உடலுக்கு கிடைக்கும் தெரியுமா? இதனால் எலும்புகள் ஆரோக்கிய மேம்படும், கண் எரிச்சல் கண் சூடு போன்ற பிரச்சனைகள் நீங்கி, கண்ணிற்கு குளிர்ச்சி கிடைக்கும். இது தவிர முடி வளர்ச்சிக்கும் உதவும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் செய்யக்கூடாதவை:
குளிர்ச்சியானவற்றை சாப்பிடாதே!
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் நீங்கள் குளிர்ச்சியான எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டாம். அதாவது ஐஸ்கிரீம், தயிர், இளநீர் போன்ற குளிர்ச்சியானவற்றை நீங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சளி, இருமல், காய்ச்சல் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
பகலில் தூங்காதே!
தலைக்கு எண்ணெய் தேய்த்த குளித்த உடனே நன்றாக தூக்கம் வரும். ஆனால் நீங்கள் பகலில் தூங்க கூடாது. காரணம் உடலில் இருக்கும் வெப்பத்தை குறைக்க தான் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். மேலும் அந்த வெப்பமானது நம்முடைய கண்கள் வழியாக தான் வெளியேறும். ஒருவேளை நாம் பகலில் தூங்கிவிட்டால் நம் உடலில் இருக்கும் வெப்பமானது வெளியேற முடியாமல், அப்படியே நம் உடலுக்குள்ளேயே இருந்துவிடும்.
இந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்காதே!
பௌர்ணமி, அமாவாசை, ஞாயிறு, திங்கள் போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டாம். ஏனெனில் இந்நாட்கள் ரொம்பவே குளிர்ச்சியானது என்பதால் குளிர்ச்சியான நாட்களில் நாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உடலில் குளிர்ச்சி கூடும். இதனால் பலவிதமான உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: எண்ணெய் தேய்ச்சு குளிக்குறவங்க.. பச்ச தண்ணீல குளிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?
நினைவில் கொள்:
- உங்களது உடல் குளிர்ச்சியாக இருந்தால் நீங்கள் எண்ணெய் தேய்க்கும் போது முதலில் பாதத்திலிருந்து தேய்த்து, பிறகு உச்சந் தலைக்கு தடவ வேண்டும். அதன் பிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து தான் குளிக்க வேண்டும்.
- ஒருவேளை உங்களது உடல் ஏற்கனவே சூடாக இருந்தால் நீங்கள் உச்சந்தலையில் இருந்து தொடங்கி பிறகு பாதத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் மட்டுமே சளி பிடிக்காது.
இதையும் படிங்க: ஆஹா .. எண்ணெய் குளியல் குளிக்க 'இதுதான் மேட்டரா'..?