Steel Bottle Cleaning Tips : உங்கள் ஸ்டீல் பாட்டிலில் வெந்நீர் ஊற்றி ஊற்றி அதனுள் வெள்ளைப்படலமாக இருக்கிறதா? எலுமிச்சையைக் கொண்டு அவற்றை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தற்போது குளிர்காலம் என்பதால் அடிக்கடி ஸ்டீல் பாட்டிலில் வெந்நீரை ஊற்றி குடித்து வருகிறோம். ஆனால் இதனால் பாட்டினுள் வெள்ளை படலம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், அதை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஒருவேளை அவற்றை சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்துவிட்டால் பிறகு பாட்டிலில் சூடான தண்ணீர் ஊற்றி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆனால் பாட்டிலை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் ஒரு எலுமிச்சை பழம் இருந்தால் மட்டும் போதும். எலுமிச்சை பழத்துடன் சில பொருட்களை பயன்படுத்தி, ஸ்டீல் பாட்டில் உள்ளிருக்கும் வெள்ளை படலத்தை சில நிமிடங்களிலே சுத்தம் செய்து விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
Steel Bottle Cleaning Tips in Tamil
எலுமிச்சை & பேக்கிங் சோடா;
இதற்கு ஸ்டீல் பாட்டினுள் 2-3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து அதனுடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் நுரை வருவதை நீங்கள் காண்பீர்கள். அடுத்ததாக அதில் வெந்நீரை ஊற்றி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது ஒரு பிரஷ் கொண்டு பாட்டினுள் நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு சுத்தமான நீரால் கழுவி காயவைத்து பயன்படுத்துங்கள்.
35
Steel Bottle Cleaning Tips in Tamil
எலுமிச்சை & உப்பு:
இதற்கு எலுமிச்சை சாற்றக் பாட்டினுள் ஊற்றி பிறகு அதனுடன் 1 ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் சிறிதளவு வெந்நீரை பாட்டினுள் ஊற்றி பாட்டிலை நன்றாக குலுக்கவும். பிறகு ஒரு பிரஷ் கொண்டு பாட்டினுள் நன்றாக சுத்தம் செய்யவும். இறுதியாக சுத்தமான தண்ணீரால் பாட்டிலை நன்றாக கழுவி காய வைத்து பயன்படுத்தவும்.
இதற்கு பாட்டினுள் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் வெந்நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின் பாட்டிலை ஒரு முறை குலுக்கவும். 10 நிமிடம் கழித்து ஒரு பிரஷ் கொண்டு பாட்டினுள் சுத்தம் செய்யவும். பிறகு எப்போதும் போல சுத்தமான தண்ணீரில் கொண்டு பாட்டியலை கழுவி காயவைத்து பயன்படுத்துங்கள்.
பாட்டினுள் எலுமிச்சை மற்றும் அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் வெந்நீரை சேர்த்து பாட்டிலே மூடி நன்றாக குலுக்க வேண்டும். அரிசி பாட்டினுள் இருக்கும் வெள்ளை படலத்தை நீங்கும். பின் சுமார் 10 நிமிடம் கழித்து பாட்டிலை திறந்து சுத்தமான தண்ணீரால் கழுவி காயவைத்து பயன்படுத்தவும்.