walking health benefits in tamil
நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் என்பது நாம் அறிந்தது. ஆனால் தினமும் நடப்பவர்களுக்கு முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாதது. ஒருவர் நாள்தோறும் நடக்கும்போது அவருடைய தசைகள், மூட்டுகள் வலுவாகிறது. தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் முதுகு வலி குறையும் என நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பதிவில் நடைபயிற்சி முதுகு வலிக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என்பதை காணலாம்.
Walking for back pain in tamil
நிபுணர்கள் பரிந்துரை
நடைபயிற்சி செய்பவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தொடர்ந்து நடப்பவர்களுக்கு முதுகு வலி குறைவதாகவும், மருத்துவரை நாடும் தேவை குறைவதாகவும் தெரிவித்துள்ளனர். நடக்கத் தொடங்கிய பின்னர் முதுகு வலியால் அவர்கள் அவதிப்படுவதும் குறைந்துள்ளது. உங்களுக்கு கீழ் முதுகு வலி இருந்தால் வெறும் நடைபயிற்சி மட்டுமே போதும். அதுவே நல்ல சிகிச்சையாக அமையும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
How walking cures back pain in tamil
முதுகு வலி நிவாரணம்
நடைபயிற்சி உங்களுடைய உடல் தசைகளை வலுவாக்குகிறது. நடக்கும்போது உடலின் மையம் (core) நன்கு இயங்குகிறது. அங்கு சமமான அழுத்தத்தை வழங்குகிறது. உங்களுடைய உடலின் மையத்தில் இறுக்கமான தசைகள் ஓய்விலும், தளர்வான தசைகள் இயங்கவும் நடைபயிற்சி உதவுகிறது. முதுகெலும்புடன் தொடர்புள்ள தசைகளை வலுவாக்கவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் மீது செயல்படவும் நடைபயிற்சி உதவுகிறது. இதனால் முதுகில் உள்ள வலி குறைகிறது.
இதையும் படிங்க: வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!!
Benefits of walking for back pain in tamil
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
அதிக நேரம் நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குறுநடை போதுமானது. குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம். இதற்கு மேல் நடக்க தெம்பிருந்தால் 30 நிமிடங்கள் வரை கூட நடைப்பயிற்சியைத் தொடரலாம். உங்களால் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு நடங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கால அளவை அதிகரிக்கலாம். ஒரே நாளில் இமயமலைதை தொடமுடியாது.
இதையும் படிங்க: வெறும் '5' நிமிஷம் வாக்கிங்க்கு இவ்ளோ பவரா? என்னென்ன நன்மைகள்??
Walking exercises for back pain in tamil
நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியது?
நடைபயிற்சி செய்யும் போது சரியான தோரணையை வைத்து கொள்ள வேண்டும். தோள்கள் தளர்வாகவும், நிமிர்ந்த தோற்றத்தில் உடலை வைத்து முன்னோக்கி பார்த்து நடக்க வேண்டும். தரையை பார்த்து நடக்கக் கூடாது. இடுப்பு தசைகளை நடுநிலையாக வைக்க வேண்டும். இதுவே நடப்பதற்கான சரியான முறை. உங்களுக்கு ரொம்ப காலமாக முதுகுவலி இருந்தால் வாரத்தின் 5 நாட்களில் 30 முதல் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும். நீங்கள் தினமும் நடந்தால் உடலுக்கு சகிப்புத்தன்மை அதிகமாகும். முதுகு வலியும் குறையும். மனநிலையை சீராக்கி மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். உடலின் பாதி வியாதிகள் மனநிலை காரணமானதுதான். மன ஆரோக்கியத்தை சரி செய்யும் போது உடலும் ஆரோக்கியமாகும்