கொரியன்ஸ் போல முகம் பளபளக்க தினமும் இரவு தூங்கும் முன் இந்த '5' விஷயங்களை செய்ங்க!

First Published | Jan 13, 2025, 9:00 PM IST

Night Skincare Routine : இரவு தூங்கும் முன் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரும பராமரிப்பு முறையை நீங்கள் தினமும் பின்பற்றி வந்தால் காலையில் உங்கள் முகம் பளபளப்பாக இருப்பதை காண்பீர்கள்.

Glowing skin routine in tamil

உங்கள் முகம் பார்ப்பதற்கு எப்போதும் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இன்றைய காலகட்டத்தில் மாசு நிறைந்த சூழலால் சருமத்தை பராமரிப்பது ரொம்பவே முக்கியமானது. தூசி, மனஅழுத்தம், மோசமான உணவு பழக்கம் போன்ற பல காரணங்களால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இது தவிர முகப்பருக்கள், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்க தொடங்கும். 

Nighttime skincare routine in tamil

இத்தகைய சூழ்நிலையால், பெரும்பாலானோர் தங்களது வயதை விட முதியவர்களாக தோன்றுவார்கள். இதன் காரணமாக அவர்கள் தன்னம்பிக்கையும் குறையும். நீங்களும் இதே பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இனி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் உங்களது சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் மாற்ற சில சரும பராமரிப்பு குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் நீங்கள் இரவு தூங்கும் முன் பின்பற்றி வந்தால் மட்டும் போதும். கொரியன் பெண்களைப் போல உங்களது முகமும் பார்ப்பதற்கு கண்ணாடி போல மினுமினுங்கும். அது என்ன என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: இரவு தூங்கும் முன் 'இத' மட்டும் செய்ங்க.. காலையில முகம் பளபளப்பாக இருக்கும்..!

Tap to resize

5-step skincare routine in tamil

ஒன்று...

பொதுவாக நாம் நம்முடைய அழகை மெருகேற்றுவதற்காக கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போது கண்டிப்பாக மேக்கப் போடுவோம். மேக்கப் நம்முடைய அழகை அதிகரிக்கும் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகும் சோம்பேறித்தனத்தால் இரவு மேக்கப்பை கழுவாமல் அப்படியே தூங்கினால் அது உங்களது சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா? ஆம், இதனால் உங்களது சருமத்தில் முகப்பருக்கள் பிரச்சனை அதிகரிக்கும். எனவே நீங்கள் தூங்கும் முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் இரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் ரோஸ்வாட்டரை பயன்படுத்தி மேக்கப்பை முகத்திலிருந்து அகற்ற வேண்டும்.

இதையும் படிங்க:  முகம் பளபளப்பாக மாற இரவில் இதுல '1' முகத்தில் தடவுங்க..!!

Skincare routine for radiant skin in tamil

இரண்டு...

ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தில் இருக்கும் மேக்கப்பை அகத்திய பிறகு, சில தூசிகள் மற்றும் மாசுகள் உங்களது முகத்தில் இருக்கும். எனவே அவற்றை அகற்ற நீங்கள் க்ளென்சர் பயன்படுத்துவது மிகவும் அவசியம். ஆனால் உங்களது சருமத்திற்கு ஏற்ப ஒரு நல்ல க்ளென்சரை பயன்படுத்துங்கள். க்ளென்சரை கொண்டு முகத்தில் மெதுவாக மசாஜ் செய்த பிறகு, சில நிமிடம் கழித்து சூடான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் உங்களது முகமானது சுத்தமாகும் மற்றும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

மூன்று...

க்ளென்சர் கொண்டு உங்களது முகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு ஒரு சுத்தமான காட்டன் துணியை கொண்டு உங்களது முகத்தை மெதுவாக துடைக்க வேண்டும். முகத்தை அழுத்தி தேய்க்க வேண்டாம் என்பதே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு ஆல்கஹால் இல்லாத டோனரை உங்களது முகத்திற்கு பயன்படுத்துங்கள். இது உங்களது சருமத்தின் பிஹெச் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது தவிர துளைகளை இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது. இதற்கு நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது பருத்தி உருண்டையின் உதவியுடன் டோனரை பயன்படுத்தலாம்.

Natural skincare routine in tamil

நான்கு...

உங்கள் முகத்திற்கு தோனரை பயன்படுத்திய பிறகு சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். இதற்கு ஒன்று அல்லது இரண்டு துளிகள் சீரத்தை எடுத்து உங்களது முகமுழுவதும் பரப்பி மெதுவாக தடவவும். சீரம் உங்களது முகத்தின் எல்லா இடங்களிலும் பரப்பவும். சீரம் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. சீரம் இல்லாமல் இரவு நேர தோல் பராமரிப்பு இல்லை என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

ஐந்து...

முகத்திற்கு சீரம் பயன்படுத்திய பிறகு உங்களது சருமத்தை ஈரப்பதமாக வைக்க வேண்டும். இதற்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உங்களது சரும வகைக்கு ஏற்றதை பயன்படுத்துங்கள். மாய்ஸ்சரைசர் உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும். இதனால் உங்களது சருமம் மிருதுவாக இருக்கும். காலையில் எழுந்து நீங்கள் பார்க்கும் போது உங்களது முகம் வறட்சியாக இல்லாமல் பொலிவாக இருக்கும்.

Latest Videos

click me!