சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்..  காரணம் இதுதான்!!

First Published | Jan 14, 2025, 10:02 AM IST

Diabetes Diet : சக்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டக் கூடாத உணவுகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

Diabetes Diet Tips in Tamil

சக்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சக்கரை நோயை மருந்தை விட உணவில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த வழியில் இரத்த சர்க்கரையை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி அவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த நோய் உள்ளவர்கள் குறிப்பாக தங்களது காலை மற்றும் இரவு உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை அவர்களது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கணிச்சமாக பாதிக்கும். எனவே நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Foods to avoid for diabetics in tamil

சர்க்கரை பானங்கள்:

பழச்சாறுகள், சோடா மற்றும் பிற இனிப்பு பானங்கள் இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட இந்த பானங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சர்க்கரை பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூடான நீர், மூலிகை டீ அல்லது சர்க்கரை இல்லாத பானங்களை குடிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் உங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளுக்கான '5' ஸ்பெஷல் ட்ரிங்க்ஸ்; வெறும் வயிற்றில் குடிங்க!

Tap to resize

Diabetes management in tamil

அதிக இனிப்புள்ள பழங்கள்:

பழங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சில வகை பழங்களில் மற்றவை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அதாவது தர்பூசணி, அன்னாசிப்பழம், நநன்கு பழுத்த வாழைப்பழம் போன்ற பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. அதாவது இந்த பழங்கள் அனைத்தும் ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். 

வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்:

பிரெஞ்சு பொரியல், சிக்கன், டோனட்ஸ் போன்ற வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அது தவிர அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடும் போது  உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது சவாலானது.

Blood sugar control in tamil

டீ & காபி:

டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க செய்யும். மேலும் காஃபின் உள்ள பாதங்களை சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் குடித்தால் செரிமான கோளாறுகள் ஏற்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் காஃபின் உள்ள பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்:

ஆல்கஹாலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இது ஆரம்பத்தில் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதை காட்டினாலும் பிறகு அதிகரிக்கச் செய்யும். சில சமயம் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் கூட தலையிடலாம். அதுமட்டுமின்றி ஆல்கஹால் ரத்த சர்க்கரை குறைவின் அபாயத்தை அதிகரிக்க செய்யும் அல்லது குறைந்த இரத்த சர்க்கரை

Healthy eating for diabetics in tamil

வெள்ளை ரொட்டி:

வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள்  வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவை உடலில் குளுக்கோஸ் அளவை விரைவாக உடைக்கும் மற்றும் செரிமானத்தை மெதுவாக்கும். காரணம் இவற்றில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் இந்த மாதிரியான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே அதற்கு பதிலாக நீங்கள் முழு கோதுமை ரொட்டி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சாப்பிடலாம். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் உடலுக்கு தேவையான நார்ச்சத்தையும் வழங்குகிறது.

இதையும் படிங்க:   இஞ்சி டீயா? இல்லங்க.. இலவங்கப்பட்டை 'டீ' குடிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு  தான் இவ்ளோ நன்மைகள்!!

Latest Videos

click me!