தயிர்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இரவில் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?

Published : Oct 08, 2024, 05:59 PM IST

Curd At Night : நீங்கள் தினமும் இரவில் தயிர் சாப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்போதும் நல்லதல்ல. ஏனெனில் இரவில் தயிர் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

PREV
15
தயிர்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இரவில் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?
curd at night good or bad in tamil

தயிர் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதனால் தான் மதியம் தயிர் இல்லாமல் சாதத்தின் கடைசி சாப்பாடு முழுமையடைவதில்லை என்று பல நினைக்கிறார்கள். தினமும் தயிர் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ரொம்பவே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் திருமணம் மற்றும் விழாக்களில் கூட தயிர் கண்டிப்பாக இருக்கும். 

ஆனால் பல இரவில் தயிர் சாப்பிட விரும்புகிறார்கள். மதியம் சாப்பிட்டால் நல்லது தான். ஆனால் இரவில் சாப்பிட்டால் பிரச்சனைகள் வரலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏன் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று அவ்வப்போது நம்மை எச்சரிக்கிறார்கள்.

 

25
curd at night good or bad in tamil

தயிரை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் இரவில் ஒருபோதும் சாப்பிடவே கூடாது என்கின்றனர் ஒருசிலர். மேலும் இரவில் தயிர் சாப்பிடுவது சிலருக்கு உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். 

தயிரில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகின்றன. ஆனால் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கு. அந்த சந்தேகத்தை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  தயிர்... யோகார்ட் உள்ள வித்தியாசம் பற்றி தெரியுமா? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

35
curd at night good or bad in tamil

தயிரின் நன்மைகள் :

1. தினமும் மதிய உணவுடன் தயிர் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்

2. தயிர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

3. தயிர் வயதான பிரச்சனையை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது

4. முக்கியமாக தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது

5. தயிர் உடலை நீர் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது

6. எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது

45
curd at night good or bad in tamil

இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் :

இரவில் தயிர் சாப்பிட்டால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் குறிப்பாக குளிர் ஊட்டப்பட்ட தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளன. மேலும் உங்களுக்கு இருமல் அல்லது சளி பிரச்சனை இருந்தால் இரவு நேரத்தில் தயிர் ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் தொண்டையில் சளியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர். குறிப்பாக, குளிர் மற்றும் மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 

55
curd at night good or bad in tamil

தயிர் சாப்பிட சரியான நேரம் எப்போது?

இரவில் தயிர் சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் காலு அல்லது மதிய நேரங்களில் தயிர் சாப்பிடலாம். இந்த நேரங்களில் தயிர் சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும்.

இதையும் படிங்க:  தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை... இந்த ரெண்டில் எது நல்லது? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Read more Photos on
click me!

Recommended Stories