இதயம் முதல் மூட்டு வரை; சால்மன் மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

First Published | Aug 29, 2024, 1:55 PM IST

சால்மன் மீன் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு சத்தான உணவு ஆகும். இது இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, கண்பார்வை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Salmon Fish

மீன் வகைகளில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சால்மன் மீன் என்று அழைக்கப்படும் கிழாங்கு மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் பல சத்துக்கள் உள்ளன. இந்த மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன் மீன் உங்கள் இதயம், தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. சால்மன் மீனின் ஆரோக்கிய நன்மைகள், அதை ஏன் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Salmon Fish

சால்மன் மீனில் கால்சியம், புரதம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பொட்டாசியம் என பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சால்மன் மீன்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

Tap to resize

Salmon Fish

மூளை செயல்பாடு

சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலைத் தக்கவைத்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்கலாம்.

Salmon Fish

கண் ஆரோக்கியம்

சால்மன் மீனின் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான கண்களைப் பாதுகாக்க உதவும். அவை வயதினால் ஏற்படும் மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

Salmon Fish

மூட்டு ஆரோக்கியம்

இந்த மீனில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அவை கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.

Salmon Fish

 ஊட்டச்சத்து 

சால்மன் மீன் பொது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பி வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Salmon Fish

எடை மேலாண்மை

சால்மன் மீனின் உயர் புரத உள்ளடக்கம் திருப்தியாக  உணர உதவும். இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கலாம். இது உங்கள் எடை மேலாண்மை முயற்சிகளுக்கு உதவலாம்.

Salmon Fish

தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

சால்மன் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. 2018 ஆராய்ச்சியின் படி, சால்மனில் காணப்படும் அஸ்டாக்சாண்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும், சரும செல்களை சேதத்திற்கு எதிராக பாதுகாக்கவும் உதவும்.

സാല്‍മണ്‍ ഫിഷ്

 வீக்கம் 

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்க அவை உதவக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

Salmon Fish

சிறந்த மனநிலை

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த மனநிலையுடன் தொடர்புடையது.. அவை மூளை செல் சவ்வு வழியாக பயணித்து, மனநிலை தொடர்பான மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்வதால் மன அழுத்தம் ஆகியவை இல்லாமல் சிறப்பான மனநிலை இருக்கும்..

Salmon Fish

 எலும்பு ஆரோக்கியம்

ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவும் சால்மன் மீனில் வைட்டமின் டி உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பாதுகாக்கலாம், இது எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும்.

Latest Videos

click me!